Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்ajith: AK61 படத்தில் அதுதான் ஹைலைட்டாம்..வெளியான வேற லெவல் தகவல்.! - ajith ak61 movie...

ajith: AK61 படத்தில் அதுதான் ஹைலைட்டாம்..வெளியான வேற லெவல் தகவல்.! – ajith ak61 movie highlighted things

அஜித் மற்றும் வினோத்தின் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகிவரும் திரைப்படம் AK61. நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு வெளியான அஜித்தின் வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் உருவாகும் AK61 படத்தில் விட்டதை பிடிக்கும் முனைப்போடு செயல்ப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

கமல் பக்கம் கவனத்தை திருப்பும் கோலிவுட்..ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்..!

வினோத் தனது முந்தைய படங்களான சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களின் திரைக்கதையை போல AK61 படத்தின் திரைக்கதையை மெருகேற்றி வருவதாக பேசப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து அஜித் இப்படத்தில் ஹீரோ மட்டும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், அதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுணக்கில்

இந்நிலையில் தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்தில் அஜித் ஒரே கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம். மேலும் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து கதைக்களம் இருப்பதாகவும், அஜித் இதில் பேங்க் கொள்ளையராகவும் மற்றும் ஆசிரியராகவும் நடிப்பதாகவும் தெரிகின்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் AK61 படத்தில் கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து காட்சிகள் ஹைலைட்டாக இருக்குமாம். பேங்க் கொள்ளை கதைக்களம் என்பதால் உச்சகட்ட பரபரப்பில் அந்த காட்சிகள் இருக்குமென்றும், அக்காட்சி ரசிகர்களை ஸீட்டின் நுனியில் அமரவைக்கும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

எப்படி மங்காத்தா படத்தில் சில காட்சிகள் இன்றளவும் நம் மனதில் நிலைத்து நிற்கின்றதோ அதே போல AK61 படத்திலும் சில காட்சிகள் நம் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் இருக்கும் என்ற தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் திருமணம்? திருப்பதியில் விக்கி, நயன்!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments