Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்ambur wife murder husband arrest | ஆம்பூரில் பயங்கரம் - சாலையோரம் படுத்துறங்கிய பெண்களுக்கு...

ambur wife murder husband arrest | ஆம்பூரில் பயங்கரம் – சாலையோரம் படுத்துறங்கிய பெண்களுக்கு கத்திகுத்து

ஆம்பூர் நேதாஜி சாலை … நள்ளிரவில் ஊரே உறங்கிக் கொண்டிருந்த நேரம் அது. யாசகம் பெற்று வாழும் பெண்கள் சிலர் சாலையோரம் படுத்துறங்கி கொண்டிருந்தனர். திடீரென்று விண்னை பிளக்கும் அளவுக்கு கத்தி கூச்சலிட்டனர். என்ன நடந்தது என்று விழித்து பார்க்க, படுத்துறங்கிய பெண்கள் கூட்டத்திற்கு நடுவே, ரத்தம் படிந்த கத்தியோடு ஆண் ஒருவர் கொலை வெறியில் நின்றிருந்தார். ஆம், படுத்திருந்த பெண்களில் இருவரை சரமாரியாக குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பெண்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கத்தியால் குத்திய நபரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிடிபட்டவர் போலீசில் கொடுத்த வாக்குமூலம் கொலை நடுங்க வைத்தது

murder,கொலை

கத்தியை வைத்து கொடூரச் செயலில் ஈடுபட்டவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த தேவேந்திரன். மூன்று மாதங்களுக்கு முன் தனம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார். இதற்கிடையே தேவேந்திரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த தனம், ஆம்பூருக்கு வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த போன தேவேந்திரன் திருவண்ணாமலையில் இருந்து ஆம்பூருக்கு வந்திருக்கிறார். வீதி வீதியாக சுற்றி திரிந்தவர் ஒருவழியாக மனைவி தனத்தை கண்டுபிடித்திருக்கிறார். பார்த்ததும் கெஞ்சி காலில் விழுந்து தன்னுடன் வாழ வரச் சொல்லியிருந்தால் கூட இன்று இப்படியொரு பிரச்சினை வந்திருக்கிறார். 

மேலும் படிக்க | 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ‘அதிமுக நிர்வாகி’ தலைமறைவு

ஆனால், மனைவியை பார்த்ததும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தூங்கி கொண்டிருந்த தனத்தை சரமாரியாக குத்தியிருக்கிறார். கத்திபட்டு சதைகள் கிழிய வலியால் சத்தம் போட, அருகில் படுத்திருந்த கெளசர் என்ற பெண், தேவேந்திரனை தடுத்திருக்கிறார். ஆத்திரத்தில் இருந்தவர் கெளசரின் காலில் கத்தியால் குத்த அவரும் சுருண்டு விழுந்திருந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் கெளசர் உயிரிழந்து போனார். உயிருக்கு போராடிய நிலையில் தனம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து கௌசரின் உடலை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தேவேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை விட்டு பிரிந்துவந்த மனைவி பழிதீர்க்கத் திட்டமிட்டு கத்தியால் குத்த, தடுக்கவந்த பெண் குத்துபட்டு உயிரிழந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | 8 வயது சிறுமியை கடத்தி முத்தம் கொடுத்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments