அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதில் படுகாயம் அடைந்த அம்ரீனா, அவரின் உறவுக்கார பையனை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அம்ரீனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறுவனின் உயிருக்கு பாதிப்பு இல்லை. அம்ரீனாவை சுட்டது லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தான் என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த 3 பேரையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அம்ரீன் பட் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த தாக்குதலில் அம்ரீன் பட் உயிரிழந்தார். அவரின் உறவினர் காயம் அடைந்தார். அப்பாவி பெண்கள், குழந்தைகளை தாக்குவதை ஏற்க முடியாது.
அவரின் 10 வயது உறவினர் காயம் அடைந்திருக்கிறார். நேற்று நடந்த தாக்குதலில் போலீஸ் கான்டபிளின் மகள் காயம், இன்று 10 வயது குழந்தை. இந்த தாக்குதல்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.