Saturday, June 18, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்annamalai: திருமாவுக்கு அண்ணாமலை பதிலடி; திமுகவை இழுத்து போட்டு புது வம்பு! - bjp state...

annamalai: திருமாவுக்கு அண்ணாமலை பதிலடி; திமுகவை இழுத்து போட்டு புது வம்பு! – bjp state president annamalai has replied to thirumavalavan

திருவாரூர் தேரோடும் வீதிகளில் ஒன்றான தெற்கு வீதியை, டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றப்படுவதாக நகர் மன்றத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு வீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. தமிழக முதல்வருக்கு பெயர் மாற்றம் செய்வது தொடர்பான மன வியாதியாக உள்ளது.

மோடி இதுவரை ஒரு இடத்திற்கு கூட பெயர் மாற்றம் செய்தது இல்லை. சாலை இல்லாத கிராமங்களில் சாலை அமைந்து விட்டு அந்த இடத்திற்கு நீங்கள் கலைஞர் பெயரை வையுங்கள். தப்பு இல்லை.

கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு தேர்; வைரலாகும் வீடியோ!

ஜாதி வேறுபாடு இருப்பதால் தான் ஜாதி பார்த்து வீடு வீடாக சென்று சாப்பிடுவதும், அதை குடும்ப தொலைக்காட்சியை வைத்து கொண்டு வெளியிடுவதையும் நாடகமாக நடத்துகின்றனர்.

மாணவியை கட்டி போட்ட மாணவர்கள்; ஆடைகளை அவிழ்த்து அத்துமீறல்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீட்டிற்கு மற்ற ஜாதியினரை அழைத்து உணவு அளிக்க வேண்டிய தானே. அது தான் சமூக நீதி என அனைவரும் பாராட்டுவர்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பணம் விடுவிக்க லஞ்சம் பெற்றதால், மனமுடைந்து இளைஞர் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நியாயம் கிடைக்கும் வரை போராடும்.

2024ம் ஆண்டு 400 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். 3 ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று நாட்டுக்கு விஷ்வ குருவாக இருப்பார்.

சென்னையில் குவியும் ரேஷன் ஊழியர்கள்; காத்திருப்பு போராட்டம்..கலக்கத்தில் அரசு!

திருவாரூர் தெற்கு வீதியை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படாது என அதிகாரிகள் கூறினார்கள். அதை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை. இதையடுத்து போராட்டம் நடைபெறுகிறது. திருவாரூர் தெற்கு வீதிக்கு மனுநீதி சோழன் என பெயர் சூட்ட வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி போல, இந்தியாவில் வீழ்ச்சி ஏற்படும் என திருமாவளவன் கூறுகிறார். இலங்கையில் குடும்ப அரசியல் காரணமாகவே பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

அது தமிழகத்திற்கும் பொருந்தும். இதேபோல் இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ளது. பிரதமர் மோடி சரிவு ஏற்பட விடமாட்டார். தமிழகத்தின் வீழ்ச்சிக்கு அறிவாலயம் தான் காரணமாக இருக்கும்.

கொளுத்திய திருமாவளவன்; கொந்தளிக்கும் மத்திய அரசு!

2024 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவிற்கு இறுதி தேர்தலாக இருக்கும். திருவாரூர் தெற்கு வீதிக்கு, கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்டினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு நாள் கூட செயல்படாத வகையில் பாஜகவின் போராட்டம் இருக்கும்.

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments