அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அறங்கோட்டை கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வள்ளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவானது 16 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் 15 வது நாளான நேற்று நள்ளிரவு கோயில் முன்பு ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்வதற்காக பிரத்தியேகமாக மரத்தாலான நொண்டி வீரன் உருவம் பொருந்திய சிலை வடிவமைக்கப்பட்டு அதற்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வைத்திருந்தனர்.
மேலும் அருகிலுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் நேற்று இரவு இறுதி நாள் காளிஆட்டம் நடைபெற்ற நிலையில் அனைவரும் காளி ஆட்டத்தை காண சென்ற நிலையில். கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலின் முன்பு இருந்த மரத்தினால் ஆன நொன்டி வீரன் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
ALSO READ | கறிக்கோழி, முட்டை விலை அதிரடியாக உயர்வு – கலக்கத்தில் அசைவ பிரியர்கள்..
இதில் மர சிலையில் உள்ள குதிரையின் கால் மற்றும் முகம் உள்ளிட்டவை துண்டாக உடைந்து உள்ளது. மேலும் மர குதிரை சிலை மற்றும் வீரன் சிலையில் பல்வேறு இடங்களில் அடித்து சேதப்படுத்தி உள்ளனர். இன்று காலை இறுதி நாள் திருவிழா நடைபெற உள்ள நிலையில் ஊர்வலம் செல்லும் மர சிலை உடைந்து உள்ளதை கண்டு அக்கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விக்கிரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர சிலை உடைப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
செய்தியாளர் : கலைவாணன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.