Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Arunraja Kamaraj next movie hero details revealed - தமிழ் News

Arunraja Kamaraj next movie hero details revealed – தமிழ் News

’கனா’ மற்றும் ’நெஞ்சுக்கு நீதி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த ’கனா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments