Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Asuran actress joined in Thala ajith next movie - தமிழ் News

Asuran actress joined in Thala ajith next movie – தமிழ் News

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’அஜீத் 61’ திரைப்படத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகை இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணாசாலை செட்டில் பரபரப்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு சில பிரபலங்கள் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது ‘அசுரன்’ படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது .

மஞ்சுவாரியர் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments