வெட்டுப்பட்ட பா.ஜ.க நிர்வாகி பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்னை காவல் வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு, கிழக்கு இணை ஆணையர் பிரபாகர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் ஆகியோர் நேரில் வந்து சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த கொலைச் சமபவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலச்சந்தர் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பாதுகாப்பு காவலர்(PSO) கேட்டிருந்ததும் அதன்பேரில் பாலச்சந்தருக்கு பாதுகாப்பு காவலர்(PSO) வழங்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
சம்பவம் நடந்த நேரத்தில் பாலச்சந்தர் தனது நண்பர்களுடன் பேசி விட்டு வருவதாக சென்றபோது பாதுகாப்பு காவலர் டீ அருந்தி விட்டு வருவதாக பாலச்சந்தரிடம் கூறிவிட்டு அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில் பாலச்சந்தரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி நாளை மறுதினம் சென்னை வரவுள்ள நிலையில் பா.ஜ.க தலைவர் பாலச்சந்தர் படுகொலை நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.