Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்BTS இசை நிகழ்ச்சி; ஏ.ஆர்.ரஹ்மான் செல்ஃபி; உக்ரைன் அதிபர் வீடியோ - 64வது கிராமி விருதுகள்...

BTS இசை நிகழ்ச்சி; ஏ.ஆர்.ரஹ்மான் செல்ஃபி; உக்ரைன் அதிபர் வீடியோ – 64வது கிராமி விருதுகள் ஹைலைட்ஸ்! | 64th Grammy Awards 2022 Event Highlights

இசை உலகில் மதிப்புமிகு உயரிய விருதுகளில் ஒன்று, கிராமி விருதுகள் (கிராமபோன் என்பதன் சுருக்கம் கிராமி). லாஸ் வேகாஸில் இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கி 64வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், இசைத்துறையில் சிறந்த பங்காளிப்பாற்றும் கலைஞர்களுக்குப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

* இந்த வருட நிகழ்ச்சியை ட்ரவர் நோவா (Trevor Noah) தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியைத் தொடங்கும் போதே, “இது அவார்ட் வழங்கும் விழா என்பதை மறந்து விடுங்கள். இது இசை நிகழ்ச்சி. இசை நிகழ்ச்சிக்கு நடுவில் விருதுகள் கொடுப்போம். இசை, நடனம், பாடல்களை ரசிக்கவுள்ளோம். மற்றவர்களின் பெயர்களைச் சொல்வதைத் தவிர்த்துவிடுங்கள்” என வில் ஸ்மித் – கிறிஸ் ராக் சம்பவத்தை பகடி செய்து ஆரம்பித்தார் ட்ரவர்.

உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி

* கிராமி விழாவில் ஜான் லெஜண்டின் (John Legend) நிகழ்ச்சிக்கு முன்பு உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கியின் காணொலி ஒளிப்பரப்பட்டது, “இசைக்கு எதிரானது மௌனம். நாங்கள் ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறோம். அவர்களது குண்டுகளால் இங்கு மௌனம் நிலவுகிறது. அந்த அமைதியை உங்கள் இசையால் நிரப்புங்கள்” எனப் பேசியுள்ளார்.

* இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் கிராமி விருதுகளில் கலந்து கொண்ட செல்பியைத் பகிர்ந்திருந்திருக்கிறார்.

* 2k கிட்ஸின் பேவரைட் இசை குழுவினர் BTS-ன் நிகழ்ச்சி ஒன்றும் இடம்பெற்றது.

1. சிறந்த இசை பதிவு (Record of the Year) – ‘Leave The Door Open’ ஆல்பத்துக்காக Silk Sonic

2. சிறந்த ஆல்பம் (Album of the Year) – ‘We Are’ ஆல்பத்துக்காக Jon Batiste மற்றும் குழுவினர்

3. சிறந்த பாடல் (Song Of The Year) – பாடல் எழுதியவருக்கான இந்த விருது ‘Leave The Door Open’ ஆல்பத்துக்காக Brandon Anderson, Christopher Brody Brown, Dernst Emile II & Bruno Mars

4. சிறந்த புதுமுக கலைஞர் (Best New Artist) – புதிதாக அறிமுகமாகும் கலைஞருக்கான விருது சென்ஷேனல் பாடகி Olivia Rodrigo

5. சிறந்த பாப் சோலோ (Best Pop Solo Performance) – ‘drivers license’ ஆல்பத்துக்காக Olivia Rodrigo

6. சிறந்த குழு (Best Pop Duo/Group Performance) – ‘Kiss Me More’ ஆல்பத்துக்காக Doja Cat மற்றும் SZA

7. சிறந்த பாரம்பரிய பாப் குரல் (Best Traditional Pop Vocal Album) -Love For Sale ஆல்பத்துக்காக Tony Bennett மற்றும் Lady Gaga

8. சிறந்த பாப் குரல் (Best Pop Vocal Album) -Sour ஆல்பத்துக்காக Olivia Rodrigo

9. சிறந்த மியூசிக்கல் திரைப்படம் (Best Music Film) – Summer Of Soul படத்திற்கு

10. சிறந்த உலக இசை ஆல்பம் (Best Global Music Album) – Mother Nature ஆல்பத்துக்காக Angelique Kidjo

11. சிறந்த ராப் பாடல் (Best Rap Song) – Jail ஆல்பத்துக்கு

12. Best Jazz Vocal Album – Songwrights Apothecary Lab ஆல்பத்துக்காக பாடகி Esperanza Spalding

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments