பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த கெங்கையம்மன் சிரசு… குடியாத்தத்தில் கோலாகலம்! | Sirasu festival held in Gudiyatham temple with large number of devotees
இதையடுத்து, சிறப்பம்சமான ‘சிரசு’ பெருவிழா இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று அதிகாலை 4 மணிக்குத் தாரை, தப்பட்டை, மேள தாளங்கள் முழங்க அம்மனுக்குச் சீர்வரிசை எடுத்துவரப்பட்டது. பின்னர், தரணம்பேட்டை முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிரசு ஊர்வலம் புறப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் 5 மணி நேரமாக பவனிவந்த சிரசு காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாகக் கெங்கையம்மன் கோயிலைச் சென்றடைந்தது. சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரசு …