ஆம் ஆத்மி தலைவர் விலகல்| Dinamalar
டேராடூன் : உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அஜய் கோத்தியால், அக்கட்சியிலிருந்து விலகினார். உத்தரகண்ட் சட்டசபை தேர்தல், கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதில் முதல்வர் வேட்பாளராக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அஜய் கோத்தியாலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்தது. கங்கோத்ரி தொகுதியில் போட்டியிட்ட கோத்தியால், டிபாசிட் இழந்தார். இதன்பின், கோத்தியாலை ஆம் ஆத்மி தலைமை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, கோத்தியால் அக்கட்சியிலிருந்து …