குஜராத்தில் வேகமெடுக்கும் ஆம் ஆத்மி… 2022 தேர்தலில் பாஜக-வுக்கு டஃப் கொடுப்பாரா கெஜ்ரிவால்? | Article about bjp vs aap in Gujarat assembly election 2022
இவ்வாறு பா.ஜ.க-வும் ஆம் ஆத்மியும் மோதிவரும் நிலையில், மற்றுமொரு ட்விட்டர் பதிவின் மூலம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். “குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் வரும் என்று கேள்விப்படுகிறேன். ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக பயப்படுகிறதா? டிசம்பர் வரை அவர்கள் எங்களுக்கு நேரம் கொடுக்க விரும்பவில்லை. ஒருவேளை அப்படிக் கொடுத்தால், ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும் என அஞ்சுகிறார்கள். ஆனால், கடவுள் நம்முடன் இருக்கிறார். எப்போது தேர்தல் வந்தாலும் ஆம் ஆத்மி வெற்றிபெறும்!” என்று பதிவிட்டிருக்கிறார் கெஜ்ரிவால். …