வேளச்சேரி, முகப்பேர், ஓ.எம்.ஆர், பட்டினப்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, அண்ணா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆலப்பாக்கம், செங்குன்றம், அண்ணாநகர், எழும்பூர், சென்ட்ரல், அசோக்நகர் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர்,சூளைமேடு, புரசைவாக்கம், வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
chennai rains: விடிய விடிய மழை: இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கலைல! – in chennai the rain bleached many places last night what will the weather be like today
கோடை வெயில் வாட்டி வதைத்த போதும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூட பல இடங்களில் மழை பெய்தது. சமீப நாள்களில்கூட பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
RELATED ARTICLES