clash-with-china-troops-india-loses-3-jawans-san – News18 Tamil

லடாக் பிராந்தியத்தில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு சீன படை உடன் நடந்த மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1975-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா உடனான மோதலில், இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதன்முறையாகும்.

இரு தரப்பிலும் பதற்றத்தை தணிக்க மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக லடாக் பிராந்தியத்தில் உள்ள எல்.ஏ.சி பகுதியில் சீனா – இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவியதால் இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.

இதனை அடுத்து, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இரு தரப்பிலும் படைகள் விலக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக படைகள் விலக்கப்பட்டு வரும் நிலையில், கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு இரு தரப்பு மோதல் நிகழ்ந்துள்ளது.

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.