Sunday, July 10, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்college girl murdered by gave poisoning in trichy | ஒரு தலைக் காதல்:...

college girl murdered by gave poisoning in trichy | ஒரு தலைக் காதல்: கல்லூரி மாணவியை வழிமறித்து விஷத்தை வாயில் ஊற்றிய இளைஞர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நொச்சிவயல் புதூரை சேர்ந்தவர் வித்யாலட்சுமி. அவருக்கு வயது 19. இவர் துவாக்குடி மணியம்மை நகரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியபடி தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

வித்யாலெட்சுமியை கடந்த ஒரு மாத காலமாக பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், கடந்த, 11ம் தேதி அவரது காதலை தெரிவித்ததாகவும், அதை ஏற்க மறுத்த வித்யாலெட்சுமி, அந்த நபரை செருப்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

அதையடுத்து, கடந்த, 12ம் தேதி மாலை, கல்லூரியில் இருந்து கிளம்பி, துவாக்குடி ‘பிலக்’ பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை விட்டு இறங்கிய வித்யாலெட்சுமி, தனது தாத்தா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த, ஒருதலைக்காதல் நபர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள், விஷம் கலந்த குளிர்பானத்தை, வித்யாலெட்சுமியை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட வித்யாலெட்சுமி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வித்யாலெட்சுமி தாயார், பெல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், பெல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 12ம் தேதி தாத்தா வீட்டிற்கு சென்றபோது வழிமறித்த 3 பேர், விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி ஊற்றியதாக மாணவி வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மூன்று நபர்கள் யார்? என்பது குறித்து ஒரு கோணத்திலும், மாணவி ஏதேனும் தவறு செய்து விட்டு அதை மறைப்பதற்காக இதுபோன்று நாடகமாடி வருகிறாரா? என்ற மற்றொரு கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, ‘விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து வித்யாலெட்சுமியை கொலை செய்த மூன்று பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வித்யாலெட்சுமியின் உடலை வாங்க மாட்டோம்’ என்று வலியுறுத்தி திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, மலைக்கோவில் அருகே, வித்யாலெட்சுமி உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சுமார், ஒரு மணி நேரம் நடந்த சாலைமறியலால் அப்பகுதியில், 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள், தங்களது பகுதியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம், திருச்சி ஆர்டிஓ தவச்செல்வம், திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், திருவெறும் டிஎஸ்பி ஜெயசீலன் ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பல ஆண்டு கனவு ரயில்: மதுரை- தேனி சிறப்பு ரயில் சேவை குறித்து எம்.பி சு.வெங்கடேசன் பூரிப்பு

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க அப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக, துவாக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த கிஷோர் (எ) கரண் (வயது 18) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்தான் வித்யாலெட்சுமியை ஒருதலையாக காதலித்தவர்.

மற்ற இருவர்கள், வித்யாலெட்சுமி உடன் கல்லூரியில் படிப்பவர்கள். தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments