Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்Crime : கள்ளத்தொடர்பால் திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. அடையாற்றில் 3 நாளாக...

Crime : கள்ளத்தொடர்பால் திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. அடையாற்றில் 3 நாளாக தேடியும் கிடைக்காத தலை

சென்னையை அடுத்த மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (65). திமுகவில் திருவெற்றியூர் 7- வது வார்டு பகுதி பிரதிநிதியாக இருந்தார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் வீட்டு கீழ்தளத்தில் பேன்ஸி ஸ்டோர் ஒன்றையும் சக்கரபாணி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 10-ம்தேதி சக்கர பாணி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சக்கரபாணியின் மனைவி லட்சுமி இதுதொடர்பாக மகன் நாகேந்திரனிடம் தெரிவித்துள்ளார். உடனே மகனுடன் சேர்ந்து லட்சுமி தனது கணவர் சக்கரபாணியை உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன் பிறகு நாகேந்திரன் தனது தந்தை சக்கரபாணியை காணவில்லை என மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். “கடந்த 10-ம் தேதி காலை 11 மணியளவில் தந்தை சக்கரபாணி பைக்கில் பச்சை கலர் சபாரி சட்டையும், அதே கலரில் பேண்டும் அணிந்து கொண்டு சென்றவர். மீண்டும் வீடு திரும்பவில்லை” என்று புகாரில் தெரிவித்து இருந்தார். புகார் தொடர்பாக மணலி போலீசார் கடந்த 11-ஆம் தேதி காணவில்லை என வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

காட்டிக்கொடுத்த செல்போன் டவர்

இதையடுத்து மணலி போலீசார் சக்கரபாணியின் செல்போன் டவர் பகுதியை ஆய்வு செய்த போது ராயபுரம் கிரேஸ் கார்டன், 3-வது தெருவை காட்டி உள்ளது. போலீசார் அந்த பகுதிக்கு சென்று ஒரு வீட்டிற்கு சென்ற போது துர்நாற்றமாக இருந்துள்ளது. சந்தேகமடைந்து அந்த வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தியபோது கழிவறைக்குள் பிளாஸ்டிக் கவரில் போடப்பட்டு போர்வையால் சுற்றி வைக்கப்பட்டு இருந்த தலை இல்லாத உடல் 6 துண்டுகளாக கொடூரமாக வெட்டி வைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தலை இல்லாத உடல்

காணாமல் போனதாக கூறப்பட்ட சக்கரபாணியின் ஆடை விவரங்களை கேட்டு அறிந்து  அந்த உடல் காணாமல் போன சக்கரபாணி என்பது தெரிந்து கொண்ட மணலி போலீசார், இது குறித்து ராயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து அந்த வீட்டிற்கு வந்த ராயபுரம் போலீசார் தலையில்லாத உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்கரபாணி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

போலீஸாரை அதிர வைத்த வாக்குமூலம்

இதையடுத்து ராயபுரம் போலீசார் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்த தமீம் பானு (40) என்பவரை பிடித்து விசாரித்த போது தான் பதற வைக்கும் தகவல்கள் வெளியானது. சக்கரபாணி வசித்து வந்த மணலி பகுதியில் தான் தமீம் பானுவும் அவரது கணவர் அஸ்லாம் உஜைனயும் வசித்து வந்துள்ளனர். தமீம் பானு பெண்களுக்கான நைட்டி தைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அவரது கணவர் அஸ்லாம் உஜைனி தி.நகரில் துணி கடை ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். வாரத்தில் இருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவார். மணலியில் இருக்கும் போது  சக்கரபாணியிடம் வட்டிக்கு தமீம் பானு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது பணத்தை வசூலிக்க சென்ற போது தமீம் பானுவுக்கும் சக்கரபாணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அது தவறான உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், தமீம் பானுவை அவரது கணவர் ராயபுரம் பகுதிக்கு அழைத்து வந்து குடியமர்த்தினார். ஆனாலும் ராயபுரம் வீட்டிற்கு அடிக்கடி சக்கரபாணி வந்து தமீம் பானுவை சந்தித்து வந்துள்ளார்.  கடந்த 10-ம் தேதி ராயபுரம் வீட்டில் தமீம் பானுவுடன் சக்கரபாணி உல்லாசமாக இருந்ததை மேல் தளத்தில் வசித்து வந்த தமீம் பானுவின் உறவினர்  (மைத்துனர்) வாசிம் பாஷா பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

கடுமையாக கண்டித்துள்ளதாக தெரிகிறது. அப்போது தன்னை மிரட்டி மிரட்டி உறவு கொள்வதாக தமீம் பானு அவரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் வாசிம் பாஷாவுக்கும் சக்கரபாணிக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் அங்கிருந்த கத்தியை எடுத்து சக்கரபாணி கழுத்தில் குத்தி உள்ளார். இதில் வீட்டிலேயே ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து அவர் இறந்து விட்டார்.

கொலை வழக்கில் கைது

அடையாற்றில் வீசப்பட்ட தலை

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர் தமீம் பானு, வாசிம் பாஷா. பிறகு வீட்டில் வைத்தே சக்கரபாணியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து பிளாஸ்டிக் பையில் வைத்துள்ளார். பிறகு கைகள், கால்கள், உடல் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி கழிவறையில் வைத்துள்ளனர். வீட்டில் இருந்த ரத்தத்தை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளனர். பிறகு வாசிம் பாஷா அதே தெருவில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு உதவியோடு ஆட்டோவில் சென்று துண்டாக வெட்டப்பட்ட தலையை மட்டும் கொண்டு சென்று அடையாறு திருவிக பாலத்தில் இருந்து அடையாற்றில் வீசி உள்ளார்.

பிறகு துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடலை ஓவ்வொரு இடத்தில்  வெளியே கொண்டு சென்று வீசி விட வாசிம் பாஷா காத்திருந்தார். இதில் உடலின் ஒரு பகுதியை பட்டிணபாக்கம் பகுதியில் வீசியதாக கூறப்படுகிறது. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என ஒவ்வொரு பாகமாக தூக்கிவீச திட்டமிட்டுள்ளனர். ஆனால் போலீசார் கண்டு பிடித்துவிட்டனர். இந்நிலையில் வாசிம் பாஷா, தமீம் பானு, ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு ஆகியோரை ராயபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக வெளியே சொல்லக்கூடாது என  தமீம் பானுவின் 2 மகள்களை வாசிம்பாஷா மிரட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் 2 மகள்களிடமும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

Must Read : பணத்தை கேட்ட பாட்டியை கழுத்தறுத்து கொல்ல முயன்ற பேரன் – கோவையில் பரபரப்பு

கணவர் அஸ்லாம் உஜைனியை வரவைத்து அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். தலையை வீசி எறிந்த அடையாற்று பகுதிக்கு வாசிம் ஜாபரை அழைத்து சென்று ராயபுரம் போலீசார் அடையாளம் காட்டப்பட்டு தீயணைப்பு மற்றும் மெரினா மீட்பு படை வீரர்களுடன்  தலையை தேடக்கூடிய பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலை தொடர்பான தடயங்களை காவல்துறையினர் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாற்றில் 3 நாளாக தேடியும் கிடைக்காத தலை

இந்நிலையில், திமுக பிரமுகரின் தலையை அடையாறில் 3 நாளாக தேடியும் கிடைக்கவில்லை. சக்கரபாணியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து சென்று அடையாறு கூவம் ஆற்றில் வீசியதாக கொலையாளி வாசிம் ராஜா வாக்குமூலம் அளித்த நிலையில், இன்று மீனவர்களை வரவழைத்து தேடும் பணியிலும் ஈடுபட போலீசார் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – அசோக்குமார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments