Wednesday, June 29, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்Devaneyan Says Will You Expel Teachers Who Are Involved In sex cases...

Devaneyan Says Will You Expel Teachers Who Are Involved In sex cases from school | பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்களை பள்ளியில் இருந்து நீக்குவீர்களா தேவநேயன் சரமாரிக் கேள்வி

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து நடைபெற்று வந்தது. நேற்றைய விவாதத்தின்போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது. மன அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவது தவறு. இந்த விவகாரத்தில் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொறுப்பல்ல. பள்ளிகள் – பெற்றோர்கள் – அரசு ஆகியோருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது. 

மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் ‘டி.சி’யில் ‘கை’ வைப்போம் – அன்பில் மகேஷ் எச்சரிக்கை

ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ மாணவர்கள் தொந்தரவு தந்தால் உடனடியாக நீக்கப்படுவார்கள். அப்படி நீக்கப்படும் மாணவர்களின் TC-யிலும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடுவோம். அதேபோல், ஆசிரியர்களுக்கு மன ரீதியாகவோ ஒழுங்கீனமாகவோ மாணவர்கள் நடந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, மாணவர்கள் பள்ளிக்குச் செல்போன் எடுத்து வரக்கூடாது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷின் இந்த அறிவிப்பு முற்றிலும் தவறானது என்று குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு!

இதுகுறித்து தேவநேயன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தவறான அறிவிப்பு இது. மாணவர்கள் தவறு செய்தால் அதை சரி செய்வது தான் சரி. அதற்காக தண்டனை வழங்குவது சரியல்ல. இதனால் குழந்தைகள் இடைவிலகல் ஆவார்கள்.  இப்படி  விலகலான குழந்தைகள்தான் பல்வேறு வன்முறைகளுக்கு ஆட்படுபவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் விளிம்பு நிலை குழந்தைகளே. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பல்வேறு விதமான ஒழுங்கீனங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது?. அவர்கள் அதே பள்ளியில் தொடரலாம் ; மாணவர்கள் மட்டும் தொடரக்கூடாது  என்பது எப்படி  சரியாகும்.?!. தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் வன்முறை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது முழுமையாக  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்பதையும்  கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் வன்முறை செய்தால் அரசாணை எண் 121 , 2012 படி அவர்கள் பணிநீக்கம் செய்யப் பட வேண்டும் மேலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்படும். இந்த அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

தயவு செய்து குழந்தைகளை குற்றவாளி ஆக்காதீர். நெறிப்படுத்துவோம்.
எனவே குழந்தைகளின் சிறந்த நலன் அடிப்படையில் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுகிறேன். நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தல் – ஏக்கத்தோடு வந்த நின்ற பள்ளி மாணவர்கள்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments