தோனி ஆரம்பிக்க இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தை ரஜினியின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் நிர்வகிக்க போவதாகவும், இந்த நிறுவனத்தின் முதல் படம் நயன்தாரா நடிக்கும் படம் என்றும் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது
இந்த விளக்கத்தில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சஞ்சய் உள்பட எந்த ஒரு நபரையும் பணிக்கமர்த்தவில்லை என்றும், போலியான செய்திகளால் யாரும் ஏமாற வேண்டாம் என்றும், நாங்கள் இப்போது பல விதமான படங்களை தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளோம் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பால் இதுவரை இந்நிறுவனம் குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.