Friday, July 1, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்DMK government is working to make Ambedkar s dream come true says...

DMK government is working to make Ambedkar s dream come true says cm Stalin / அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுகிறது

காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு  சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில்  நடைபெற்ற  ‘The Dalit  Truth – The Battles for realising ambedkar’s vision  எனும் புத்தகத்தின் அறிமுக விழாவில்  பங்கேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டார். இந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,  மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ , மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  , புத்தகத்தின் தொகுப்பாளர் ராஜூ , குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி , அமைச்சர்கள் கே.என்.நேரு , சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது  உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டியலின , பழங்குடியின மக்களுக்கான அரசியலமைப்பு சட்டம் எந்தளவு செயல்பாட்டில் உள்ளது என்பதை அலசி ஆராய்ந்துள்ளார் ராஜூ. முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை 13 பேரின் கட்டுரையும் கருத்து பெட்டகமாக அமைந்துள்ளது. திமுக தமிழ்நாட்டில் பட்டியலின , பழங்குடியின மக்களுக்கான சமூக நீதியை முறையாக நிறைவேற்ற   எதிர்கட்சியாக இருந்தபோதும் போராடி பல தியாகம் செய்துள்ளோம்.

பட்டியலின , பழங்குடியினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 16 லிருந்து 18 ஆக இட ஒதுக்கீட்டை 1971 ல் கருணாநிதி உயர்த்தினார். 1989 ல் பழங்குடியினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியது , 2009-ல் அருந்திதியருக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியது திமுகதான். நாட்டில் அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலை முதலில் அமைத்தது திமுகதான்.

சமத்துவபுரம் தாட்கோ , புதிரை வண்ணார் , தூய்மை பணியாளர் நல வாரியங்கள் அமைத்தது திமுக. பெண் சிங்கம் படத்தில் கருணாநிதி எழுதிய கதை வசனத்திற்கு கிடைத்த  50 லட்சத்துடன் , தனது பணத்தையும் சேர்த்து  61 லட்சத்து  5ஆயிரத்தை பொறியியில் படித்த முதல் தலைமுறை பட்டதாரி  மாணவர்களுக்கு கருணாநிதி வழங்கினார்.

Also Read : கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு… முதல் தகவல் அறிக்கை நகல் வெளியீடு

இந்த புத்தகத்தில் இயக்குநர் ரஞ்சித் திராவிட இயக்க திரைப்படங்கள்  குறித்து சுட்டி காட்டினார். , திமுக ஆட்சியில் முற்போக்கு படங்கள் எடுத்தால் வெற்றி பெறும் என தயாரிப்பாளர்கள் நம்பும் விதமாக இருந்த்து என ரஞ்சித  கூறியுள்ளார். அண்ணா , கருணாநிதி திரைத்துறையை கருவியாக பயன்படுத்தி முற்போக்கு கருத்தை பரப்பினர் , அந்த வழியில் நானும் பயணிக்கிறேன். கருணாநிதியின் ‘ஒரே ரத்தம்’  படத்தில  நந்தக்குமாராக நானும் நடித்தேன். கதாபாத்திரத்தின்  பெயரே நான் யார் என்பதை எடுத்து சொல்லும்.

அருண்ராஜா காமாராஜ்  இயக்கிய உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை நேற்று முன்தினம் பார்த்தேன். பட்டியலின மக்களுக்கான உரிமையை பேசும் சிறப்பான படமாக இருக்கிறது. மதவாத ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தற்போது பகுத்தறிவு படங்களை அதிகம் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நடப்பது எனது அரசு அல்ல , நமக்கான அரசு. அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

இறையான்மை , சமதர்மம் , மத சார்பின்மை , மக்களாட்சி நான்கும் இணைந்து பயணிக்கும் குடியரசாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கர் கனவு. நாடு வளர மாநிலம் வளர வேண்டும் , மாநிலம் வளர  மாவட்டம்  வளர வேண்டும் , மாவட்டம் வளர வேண்டும் என்றால் கிராமங்கள் சமூக நீதி ,  சமத்துவ பூங்காவாக மாற வேண்டும் ,

அதனால்தான்  உலகின் வல்லரசு , நல்லரசாக இந்தியா மாறும். அம்பேத்கரின் எண்ணங்களை பிசகாமால் நிறைவேற்றுகிறது திமுக  , எப்போதும் நிறைவேற்றும் திமுக ” என்று கூறினார்.

இந்த  நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிக்னேஷ் மேவானி பேசுகையில், “தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற வேகமாக செயல்படுகிறது. தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள். அதன் கொடுமை எங்களுக்கு நன்றாக தெரியும். தமிழகத்திற்கு சாவர்கர் தேவையில்லை. பெரியாரை கொண்டாடுங்கள்”, என்றார்.

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments