Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Doctor Strange in the Multiverse of Madness: நிறைய கேமியோ, பிரமாண்ட VFX, இது...

Doctor Strange in the Multiverse of Madness: நிறைய கேமியோ, பிரமாண்ட VFX, இது மார்வெல் ஹாரர் சினிமா! | Doctor Strange in the Multiverse of Madness movie review – A superhero flick with horror touches

ஆனால், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் டைட்டில் ரோலாகவே இருந்தாலும், அவரையே ஓவர்டேக் செய்வது எலிசபெத் வொல்சனின் மிரட்டல் பெர்ஃபாமன்ஸ்தான். வாண்டாவாக, தி ஸ்கார்லெட் விட்சாக பல பரிமாணங்களில் திரையில் தோன்றும் அவர்தான் படத்தின் உயிர்நாடி. டிரான்ஸ்பர்மேஷன் காட்சிகள், சண்டைக் காட்சிகளில் தன் அதீத சக்தியினால் எல்லோரையும் லெஃப்ட்டில் டீல் செய்வது என ‘வாண்டாவிஷன்’ தொடரைப் போன்றே இதிலும் தன் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். எல்லோரையும் அலறவிடும் பாத்திரம்தான் என்றாலும், தாய்ப்பாச காட்சிகளில் அவரின் வேறொரு மனநிலையையும் சிறப்பாகவே திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

Doctor Strange in the Multiverse of Madness

Doctor Strange in the Multiverse of Madness

பெனிடிக்ட் வாங், ரேச்சல் மெக் ஆடம்ஸ், டீனேஜ் பெண் அமெரிக்கா சாவேஷாக வரும் சோச்சில் கோமெஸ் (Xochitl Gomez) எனத் துணை கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் முக்கியமான பங்களிப்புகள் படத்தில் இருக்கின்றன. அவற்றை அனைவருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார் இயக்குநர் சாம் ரெய்மி. அதிலும் பழைய ஸ்பைடர்மேன் படங்களுக்குப் பிறகு மார்வெல் சூப்பர்ஹீரோ படங்களின் பக்கம் கம்பேக் கொடுத்திருக்கிறார். வித்தியாசமாக தன் ஆஸ்தான ஹாரர் டெம்ப்ளேட்டையும் இந்தக் கதையினுள் புகுத்தியிருக்கிறார். அப்படியான காட்சியமைப்புகள் இந்தக் கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கின்றன. டேனி எல்ஃப்மேனின் பின்னணி இசை படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. குறிப்பாக இரண்டு டாக்டர் ஸ்ட்ரேஞ்சுகளுக்கு இடையே நடக்கும் அந்த மியூசிக்கல் சண்டைக் காட்சிக்கான பின்னணி இசை, திரைக்குப் புதிது.

Doctor Strange in the Multiverse of Madness

Doctor Strange in the Multiverse of Madness

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments