Saturday, July 2, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்father murdered mother of the boy who fell in love with his...

father murdered mother of the boy who fell in love with his daughter | மகளை காதலித்த பையனின் தாயை வெட்டி சாய்த்த பெண்ணின் தந்தை

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் பையனின் அம்மாவை வெட்டி கொலை செய்த பெண்ணின் தந்தை கைது.

அபிராமம் அருகே மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் பையனின் அம்மாவை வெட்டி கொலை செய்த பெண்ணின் தந்தை இந்த செயல் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து சூடு வைத்த ஆசிரியை!

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா (20). இவரை அதே கிராமத்தை ஒரே சமூகத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித் (24) என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், பெண்ணின் தந்தை கண்ணாயிரம் ஆத்திரத்தில் வினித் என்பவரின் தாய் ராக்குவை (53) அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். 

மேலும் படிக்க | பழனி : உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க‌நகைகளை திருடிய பெண் ஊழியர்..!

இந்த குறித்து தகவல் அறிந்த கமுதி டிஎஸ்பி மணிகண்டன், அபிராமம் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் இறந்த பெண்ணின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்போது இது சம்பவம் குறித்து அபிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | மாவட்ட ஆட்சியரின் பெயரில் மோசடி செய்யும் மர்ம கும்பல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments