Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்Headlines Today : பிளஸ்-2 பொதுத்தேர்வு... பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... - தலைப்புச்...

Headlines Today : பிளஸ்-2 பொதுத்தேர்வு… பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு… – தலைப்புச் செய்திகள் (மே 5-2022)

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் என்று சுகாதாரத்துறை சுற்றறிக்கை.

பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆரத்தழுவி வரவேற்றார்.

நீட் விலக்கு சட்ட முன்வடிவை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.

மத விஷயங்களில் தலையிட தமிழக அரசுக்கு உரிமை உள்ளதா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ள மதுரை ஆதீனம், பிரதமர் மோடியை சந்தித்து பாதுகாப்பு கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.

கட்சிக்கு எதிரான தனியார் நிறுவனம் சார்பில் ப.சிதம்பரம் ஆஜரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வழக்கறிஞர்கள் போராட்டம்.

தமிழகத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சந்தேக மரணமடைந்த விசாரணைக் கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழை மக்களை மகிழ்ச்சியடை செய்துள்ளது.

மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி விவகாரத்தில் சமஸ்கிருத திணிப்பை ஏற்க முடியாது என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் 30 பேர் 8 ஆவது நாளாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.

சேலத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஒன்றரை டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் உயிரிழந்த ஆண்ட்ரூஸ் சித்தரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு வழங்கி பதிவாளர் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்தது.

எல்.ஐ.சி பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம். முதல் நாளிலேயே 67 சதவீத பங்குகள் விற்பனை.

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளை பாதுகாக்க புதுச்சேரி வனத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Must Read : கோட நாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? – ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேர விசாரணை

நடிகர் விமலிடம் பணமோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

6 மாத சம்பள பாக்கியை தராத ஆம்னிப் பேருந்தை, தனது குடும்பத்தினருடன் வந்து சிறைபிடித்த ஓட்டுநரால் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் போராடி தோல்வியை தழுவிய சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments