இந்திய சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல்போக்கு நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், இன்று காலையில் இந்திய ராணுவத்துக்கும், சீனா ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், ராணுவ உயர் அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரரும் உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில், சீனா ராணுவ வீரர்களுடன் நடைபெற்ற சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது. அதேபோல, சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.