ஆனால், பெற்றோர் இந்திய குடியுரிமையை இழந்துவிட்டதால் பிரணவுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என, மத்திய உள்துறை அமைச்சகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து பிரணவ் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்தாலும், அந்த காலகட்டத்தில் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு உரிமை உள்ளது எனக் கூறி, அவருக்கு குடியுரிமை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்..