Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்Indian govt is fully committed to focusing on the Tamil language and...

Indian govt is fully committed to focusing on the Tamil language and culture PM Modi

தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கவனப்படுத்த இந்திய அரசு முழு அர்பணிப்புடன் இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வந்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சியில் மேலும் ஒரு பயணமாக இன்று 31,000 கோடிக்கு மேற்பட்ட திட்டங்களுக்கு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டத்தால் சென்னை மாநகரம் போக்குவரத்தில் மிகப்பெரிய அளவில் மேம்பாடு அடையும்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வரலாறு சிறப்புமிக்க சென்னை களங்கரை திட்டம் மூலம் வீடு கிடைக்கப்பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திட்டத்தில் 1,152 பேருக்கு வீடுகள் கிடைப்பது பெருமையாக இருக்கிறது.

நாட்டின் பல்வேறு இடங்களிலும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா திட்டத்தை இந்த அரசு முனைப்புடன் இருந்து வருகிறது. இந்ததிட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாகிறது.

தலைசிறைந்த உட்கட்டமைப்புகளே சிறந்த எதிர்காலத்தை அளிக்கும். உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் வளரும் நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்த நாடுகளானது. அதனால், நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. சமூக கட்டமைப்புகளை மேம்டுத்துவதன் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடையும். ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீரை கொண்டு சேர்ப்பதற்கு உழைத்து கொண்டு இருக்கிறோம். அதிவேக இணைய சேவையை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சேர்ப்பதே எங்களின் தொலை நோக்கு திட்டம்.

தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் மேலும் கவனப்படுத்த இந்திய அரசாங்கம் முழு அர்பணிப்புடன் இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கியது அதற்கு முழுமையும் ஒன்றிய அரசே பணம் கொடுத்து வருகிறது.

புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்கள் அவர்களின் மொழியிலே படிக்கலாம். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் பயன் அடைவார்கள். யாழ்பானத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான். இலங்கை மக்களுக்கு சாலை போக்குவரத்து கலாச்சார மேம்படுத்துதல் தான்.

75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பயணத்தை தொடங்கினோம். சுதந்திர போராட்ட தியாகிகள் வளர்ந்த இந்தியாவை காண நிறைய கனவுகள் கண்டனர். நாம் அனைவருக் ஒன்றிணைந்து இந்தியாவை வளமானதாகவும்,வளர்ச்சியாகவும் மாற்ற பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments