k annamalai: பிரதமர் மோடி இருந்திருந்தால் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நடந்திருக்காது – அண்ணாமலை பேச்சு! – if prime minister modi had been there the mullivaikkal genocide would not have taken place annamalai speech

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரின் போது முள்ளி வாய்க்கால் பகுதியில் இனப்படுகொலை நடைபெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: “பாரத பிரதமராக நரேந்திர மோடி 2008இல் இருந்து இருந்தால் இன்று இந்த நிகழ்வே நடந்து இருக்காது. அன்று இலங்கையில் நடந்தது வரலாற்று பிழை. பழ நெடுமாறன் அவர்கள் இலங்கையில் இருந்திருந்தால் இன்று இலங்கையின் மகாத்மாவாக பேசப்பட்டு இருப்பார். இலங்கை பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும் அந்த தீர்வை கொடுக்கக்கூடிய ஒரே ஒரு ஆள் நம் பாரத பிரதமர் மோடி ஜி தான். அவர் வெறுமனே பேசுபவர் மட்டுமல்ல. 1983 இல் கொழும்புவில் நடந்தது இதைவிட கொடுமையான நிகழ்வுகள். அப்பொழுது சோசியல் மீடியா இல்லை என்பதால் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை.

இலங்கைக்கு தேவை என்ன என்பதை அங்குள்ள தமிழர்களுக்குத் தேவை என்ன என்பதை இங்குள்ள நபர்கள் ஏசி ரூமில் முடிவு செய்யக்கூடாது. அங்கே உள்ள மனிதர்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழர்கள் பகுதியில் தமிழர் அல்லாதோர் அரசாங்க அலுவலகத்தில் பணியில் உள்ளார்கள். இதெல்லாம் அங்கே முக்கிய பிரச்சினைகள். நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சாதாரண ஆள் கிடையாது. அவரும் தமிழர்தான். அவர் இது சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கிறார். வட பகுதியில் ஒரு தமிழன் முதல்வராக வர நிறைய வாய்ப்புள்ளது.

அந்தப் பகுதியின் அதிகாரப் பகிர்வுக்கு அது மிகவும் அவசியம். ஆர்ட்டிகள் 13படி அங்கு தேர்தல் நடத்துங்கள் என்று கோரிக்கை வைத்தேன் அதற்கு அங்கே தலைவர் சொன்னார். தேர்தல் நடத்த பேலட் பேப்பர் வேண்டும் அதை வாங்க கூட தற்போது இலங்கையில் காசில்லை என்று. கச்சத்தீவை மீட்பது பற்றி பேசினேன். முக்கியமாக வடகிழக்கில் இருக்கும் நம் தமிழ் சொந்தங்கள் தான் கச்சத்தீவை இந்தியாவுக்கு தரக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாகவும் அவர்களுடன் பேசினேன்.
Exclusive: ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்த ஸ்டாலின் மருமகன், மகள்!
இப்படி அங்கே இருக்கும் தமிழர்களையும் சமாளித்து இலங்கை அரசுடன் பேசி அங்கே சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்டு இன்று அங்கே சிறையில் ஒரு தமிழக மீனவர்கள் யாரும் இல்லை. தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருந்த 5 மீனவர்களை பாரதப் பிரதமர் மோடி ஜி இலங்கையில் ஜனாதிபதியிடம் பிரஷர் போட்டு உயிருடன் மீண்டு வந்துள்ளார். அப்படியிருந்தும் ஏன் இங்கு இருக்கும் சிலர் ஏன் பாஜகவை எதிரியாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

இங்கு இருக்கும் தலைவர்களுக்கு நன்கு தெரியும் 2009 க்கு பின்னர் இந்தியா மீது கடும் கோபத்தில் இருந்தார்கள் ஈழத்தமிழர்கள். ஈழத்தமிழர்களுக்கு 46 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார் மோடி ஜி. 12 மில்லியன் டாலரில் யாழ்ப்பாண லைப்ரரி எரிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே யாழ்ப்பாண கலாச்சார சென்டர் என்ற கட்டிக் கொடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஒரு விமான நிலையம் கட்டிக் கொடுத்துள்ளார்.

இங்கு அதிகமாக நான் அரசியல் பேச விரும்பவில்லை. அதனால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க கூடிய ஒரே மனிதர் நரேந்திர மோடி தான். நான் வருவதால் சிலர் வரவில்லை என்று சொன்னார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் வரல அவர்களை கூப்பிடுங்க என்று சொன்னேன். ஏனென்றால் அவர்கள் எல்லாம் தொடர்ச்சியாக இந்த மேடைக்கு வந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் வருவதால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நான் வருகிறேன் என்று சொன்னேன். எந்த ஒரு நிகழ்வுக்கும் சரி தப்பு என்பது பொருந்தாது நடுவில் என்று ஏதோ இருக்கிறது அதுதான் இந்த நிகழ்ச்சிக்கும் பொருந்தும்.” இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

முன்னதாக, முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான கருத்தரங்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டால், தாங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பல்வேறு கட்சிகள் தமிழ் அமைப்புகள் புறக்கணித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

Your email address will not be published.