ஏனென்றால் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் 2 திரைப்படம் சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து கமல் அரசியல், டிவி நிகழ்ச்சி என பிசியானதால் இனி இவர் படங்களில் நடிப்பது சந்தேகம் தான் என சிலர் பேசிவந்தனர்.
அந்த சூழலில் தான் கமல் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் கமல் நடிக்கும் படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டது. கமலே தயாரித்து நடிக்கும் இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கமலுடன் இணையும் பா. ரஞ்சித்; குஷியில் ரசிகர்கள்!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்
மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இப்படத்தை அடுத்து கமல் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்..
அதைத்தொடர்ந்து தற்போது KGF படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் கமலை தன் படத்தில் நடிக்கவைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிக்கப்படுகின்றன.
பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் சளார் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் மிகமுக்கிய கதாபாத்திரத்தில் கமலை நடிக்கவைக்க பிரஷாந்த் நீல் முயன்று வருகின்றார். ஆனால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியுள்ள கமல் இப்படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.