Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்kamal: Vikram: கமலிடம் கதை சொல்லிய அனுபவம்...ஓப்பனாக பேசிய லோகேஷ் கனகராஜ்..!

kamal: Vikram: கமலிடம் கதை சொல்லிய அனுபவம்…ஓப்பனாக பேசிய லோகேஷ் கனகராஜ்..!

லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த நான்கே ஆண்டுகளில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். 2017 ஆம் ஆண்டு எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனரானார் லோகேஷ் கனகராஜ்.பெரிய நட்சத்திரங்கள் யாருமின்றி வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. அதைத்தொடர்ந்து கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர் தற்போது வெளியாகவிருக்கும் உலகநாயகனின் விக்ரம் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கின்றார் லோகேஷ் கனகராஜ்.

தொடர் வெற்றி

2017 ஆம் ஆண்டு ஸ்ரீ, ரெஜினா ஆகியோரின் நடிப்பில் வெளியான மாநகரம் படம் இந்த அளவிற்கு வெற்றிபெறும் என்று யாரும் நினைக்கவில்லை. சிறு பட்ஜெட் படங்களில் ஒன்றாக வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. தன் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்கச்செய்தார் லோகேஷ் கனகராஜ். அதன் பின் 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தை இயக்கினார். பாடல்கள் மற்றும் நாயகி இல்லாமல் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை தந்தது. இப்படமும் ரசிகர்களின் அமோகவரவேற்பை பெற கைதி திரைப்படம் லோகேஷ் கனகராஜை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றது. இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜுக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மாஸ்டர்

கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் என்ற வித்யாசமான கூட்டணியால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்தது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார். கொரோனா சூழலில் மாட்டிக்கொண்ட இப்படம் ஒருவழியாக திரையில் கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. ரசிகர்களுக்காக திரையரங்கில் மட்டுமே மாஸ்டர் படம் வெளியாகும் என்று அடம் பிடித்து இப்படக்குழுவினர் காத்திருந்து இப்படத்தை திரையில் வெளியிட்டனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் அந்த கொரோனா சூழலிலும் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசனை இயக்கப்போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் கமல் அரசியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பிசியானதால் இவர்கள் கூட்டணி சாத்தியமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு இவர்கள் கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விக்ரம் என பெயரிடப்பட்ட இப்படத்தை கமலே தனது ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து நடித்தார். மேலும் கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடித்துள்ளனர் .அனிருத் இசையில் இப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகின்றது.

கதை சொல்லிய அனுபவம்

லோகேஷ் கனகராஜ் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனிடம் விக்ரம் படத்தின் கதையை கூறிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கைதி படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டினாராம். அதன் பிறகு கமல்ஹாசன் தரப்பிலிருந்து ஏதாவது கதை இருக்கின்றதா என்று லோகேஷ் கனகராஜிடம் கேட்டார்களாம். அப்பொழுது மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்த லோகேஷ் கனகராஜ் கமலை சந்திக்க சென்றார். ஆனால் அவரிடம் அப்பொழுது கைவசம் கதை இல்லை. ஒரு ஒன் லைன் மட்டுமே இருந்தது. எனவே கமலிடம் சென்று இப்பொழுது என்னிடம் ஒரு வரி கதை மட்டுமே உள்ளது என்றும், அதை டெவெலப் செய்ய சற்று கால அவகாசம் வேண்டும் என்றும் கமலிடம் கேட்டாராம் லோகேஷ். கமலுக்கு அந்த ஒன் லைன் ஸ்டோரி பிடித்துப்போகவே அதை டெவெலப் செய்ய சொல்லியிருக்கின்றார். அந்த ஒன் லைன் ஸ்டோரி தான் தற்போது விக்ரம் படமாக ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments