Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Karthi: அஜித்துடன் நேரடியாக மோதும் கார்த்தி: வெளியான மரண மாஸ் அறிவிப்பு.! - karthi's sardar...

Karthi: அஜித்துடன் நேரடியாக மோதும் கார்த்தி: வெளியான மரண மாஸ் அறிவிப்பு.! – karthi’s sardar movie clash with ajith’s ak61 movie

பாகுபலி பாணியில் படமா? அதிரடி காட்டும் சூர்யா!

முத்தையா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘கொம்பன்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து ‘விருமன்‘ படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். இந்தப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப படமாக உருவாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில் மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்‘ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். கொரோனா காரணமாக பலமுறை இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர் படக்குழுவினர்.

ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி தீபாவளி வெளியீடாக இந்தப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கமலால் கண்ணீர் விட்டு கதறிய ரசிகர்கள்: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.!
அஜித்தின் ‘ஏகே 61’ படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. எச். வினோத், போனி கபூர் கூட்டணியில் இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் இணைந்துள்ளார் அஜித். இத்ன்படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் படத்துடன் கார்த்தியின் ‘சர்தார்’ படம் நேரடியாக மோதவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments