நடிகர் கவின் ‘டாடா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
கவின் ஜோடியாக ’பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்து வருகிறார் என்பதும் கணேஷ் பாபு என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ‘டாடா’ படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மகனே என் கண்மணி என்ற இந்த பாடலை ஜென் மார்ட்டின் என்பவர் கம்போஸ் செய்ய இந்த பாடலை சத்தியநாராயணன், ஜென் மார்ட்டின், மாரியம்மாள் மற்றும் பிரார்த்தனா ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர். ஆஷிக் ஏ.ஆர். எழுதிய இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
With lots of hope and love, we present our #DadaSong , specially dedicated to all you dada's out there.
Happy father's day 🙂 @JenMartinmusic @AshiqueAR10@Musician_foreva #kidakuzhimariyammal #PrarthanaSriram @imxblakSong link ???? https://t.co/bFqHqP1W3g pic.twitter.com/tFK2JbNWGl
— Kavin (@Kavin_m_0431) June 19, 2022