Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Keethi Suresh join in Director Shankar next movie - தமிழ் News

Keethi Suresh join in Director Shankar next movie – தமிழ் News

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்சி 15’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ராம் சரண் தேஜா இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் இந்த படத்தில் கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று வெளியாக ‘சாணிக்காகிதம்’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் அதேபோல் அடுத்த வாரம் வெளியாக உள்ள மகேஷ்பாபுவின் ’சர்காரு வாரு பாட்டா’ என்ற திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஷங்கர் ’ஆர்.சி. 15’ படத்தில் என்ன கேரக்டரை கொடுத்திருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments