Thursday, June 30, 2022
Homeஜோதிடம்Land Properties Numerology: யாருக்கெல்லாம் வீடு, மனை என பல சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும்...

Land Properties Numerology: யாருக்கெல்லாம் வீடு, மனை என பல சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும் தெரியுமா? – which people are easily buy land, house properties based on born date : mars adhipathi for land

ஒவ்வொருவரும் தன் எதிர்காலத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கத்தான் செய்யும். ஜோதிடத்தில் ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் அவரின் ஜாதக அமைப்பு உதவுகிறது. இந்த ஜாதகமே அவர் பிறந்த தேதி, நேரத்தை அடிப்படையாகக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் நாம் பிறந்த தேதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்தை பிரதிநிதித்துவம் படுத்துகிறது.

கிரகங்கள் மற்றும் அவற்றின் தொடர்புடைய எண்கள் :
சூரியன் : 1
சந்திரன் : 2
குரு : 3
ராகு : 4
புதன் : 5
சுக்கிரன் : 6
கேது : 7
சனி : 8
செவ்வாய் : 9

பிறந்த தேதி எண் கணிதம்
ஒவ்வொருவரின் பிறந்த தேதிக்கும் ஒரு குறிப்பிடத்தகுந்த பலன் இருக்கிறது. பிறந்த தேதியும், அதை ஆளக்கூடிய கிரகங்களும் அந்த நபரை ஆட்டிப்படைப்பதாகவும், அவர்களுக்கு உரிய அதிர்ஷ்ட பலன்களை அளிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அதாவது ஒருவர் 12ம் தேதி பிறந்திருந்தால் 1+2=3. குரு பகவானுக்குரிய எண். அவரின் பலன்கள் கிடைக்கும்.

நவகிரகங்களில் எந்த கிரகம் உச்சமானால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
சொத்து வாங்குவதற்கான எண் கணிதம்
எண் கணிதத்தின்படி, ஒருவர் 9, 18 (1+8=9), 27 (2+7=9) ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் பிறந்திருந்தால் அவர்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட எண்ணில் பிறந்தவர்களாவார்கள்.

சூரியனுக்கு அருகில் உள்ள செவ்வாய் வேகமாக சுற்றக்கூடியவர். அந்த வகையில் 9 அல்லது கூட்டுத்தொகை 9 வரக்கூடிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் வேகமானவர்களாகவும், ஆற்றலும், துணிச்சல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

நவகிரகங்கள் எப்படிப்பட்ட நோய்களை ஏற்படுத்தக் கூடும்? – எப்படி பாதுகாத்துக் கொள்வது?

மிகவும் நேர்மையானவர்களாக இருக்கும் இவர்கள், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதிகம் பிரயேத்தனப்படுவார்கள். பழைய வாழ்க்கையில் நடந்த கசப்பு, இனிப்பான சம்பவங்களைப் பெரியளவில் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். அதனால் தங்கள் வாழ்க்கையில் மிகவேகமாக முன்னேறக்கூடிய எல்லா சாத்தியக்கூறுகளையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் நிலத்தைக் குறிக்கக்கூடியதாகும். அதாவது விவசாய நிலம், மனை, கட்டிடம் போன்றவற்றை தொடர்புடையது. அதனால் தான் இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு நிலம் சார்ந்த சொத்துக்களுக்கு பஞ்சமிருக்காது.

நிலமே பிரதானமாக வைத்து தொழில் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு, ரியல் எஸ்டேட் பிரமுகர்களுக்கு மிகவும் சாதகமான, நிறைய லாபம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு பிரச்சினையிலும் பீதி அடையாமல், உறுதியுடன் எதிர்கொள்வார்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் :
செவ்வாய் அதிபதியாக கொண்ட எண்களில் பிறந்தவர்கள் மிகவும் கோபப்படுவார்கள். இவர்களின் ஆரோக்கியத்தில் சற்று பலவீனமானவர்களாகவும், அடிக்கடி காய்ச்ச, தலைவலி, காயம், இரத்தம் சார்ந்த கோளறு போன்ற உடல் பிரச்சினையால் பாதிக்கப்படலாம்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் நெருப்பு மற்றும் அபாயம் தரும் இரசாயனங்கள் மூலம் ஏற்படும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அதனால் தீ மற்றும் ரசாயனங்கள் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் செய்வது அவசியம்.

வழிபாடு :
செவ்வாய் அதிபதியாகக் கொண்ட 9, 18, 27 ஆகிய எண்களில் ஒன்றில் பிறந்தவர்கள் எம்பெருமான் முருகனை செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வருவது நல்லது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments