Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Lokesh Kanagaraj: ``கமல் சார் பார்த்து கைகாட்டணும்னு அவர் வீட்டு வாசல்ல காத்திருந்தேன்!" | logesh...

Lokesh Kanagaraj: “கமல் சார் பார்த்து கைகாட்டணும்னு அவர் வீட்டு வாசல்ல காத்திருந்தேன்!” | logesh kanagaraj speech at vikram audio launch

“எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. சார் இப்போ வந்து கைகாட்டணும்னு வேண்டிக்கிட்டேன். ஆனால் அவருக்கே என்னை ஆக்ஷன் கேட் சொல்ல வச்சுட்டாரு. இதை கமல் சார் கிட்ட சொன்னப்போது அவர் வழக்கம் போல ‘நானும் இல்லைன்னு சொல்லல. இருந்தா நல்ல இருக்கும்னு தான் சொல்றேன்’ என சொன்னார். சர்-ரியலா இருக்கு. என் ஊர்ல இருந்து இந்த இடத்துக்கு வந்து சாரை டைரக்சன் பண்ற நிலைல இருக்கேன்னா அதுக்கு சார்தான் காரணம், அதுக்கு பின்னாடி 10 வருஷ உழைப்பு இருக்குனு நினைக்கிறேன்.”

விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு விழா

விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு விழா

“சார் உழைப்பு பத்தி சொல்லணும்னா ஒரு நிகழ்வு ஞாபகம் வருது. கோவிட்டுக்கு பிறகு சார் நடிக்க இருந்த கிளைமாக்ஸ் சீனை மிட்-நைட்ல 2 மணிக்கு சூட் பண்ணோம். அப்போ சார் சூட்டுக்கு முன்னாடி ட்ரைசெப்ஸ் மெயின்டைன் பண்ணுவதற்காக 26 புஷ் அப்ஸ் எடுத்துட்டு ஸ்பாட்டுக்கு வந்தார். இதைப் பார்த்த பிறகு நாமெல்லாம் இந்த வயசுல பண்றது உழைப்பே இல்லை எனத் தோன்றியது. படம் பார்த்துட்டு ‘சார் எனக்கு படம் பிடிச்சுதுன்னு’ சொன்னாங்க. எனக்கு அப்போ தான் ரிலீவ் ஆன மாதிரி இருந்தது. சின்சியரா வேலை செய்து இருக்கோம். படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்னு நம்புறேன்” எனப் பேசி முடித்தார். விக்ரம் படத்தில் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது பற்றியும் லோகேஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments