Friday, July 1, 2022
Homeசினிமா செய்திகள்Madhavan in Rocketerry released in July 1 - தமிழ் News

Madhavan in Rocketerry released in July 1 – தமிழ் News

பிரபல நடிகர் மாதவன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ராக்கெட்டரி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு கதையான ‘ராக்கெட்டரி’ திரைப்படத்தில் நடிகர் மாதவன், நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்து இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டர் வெளியாகி ஜூலை 1இல் திரை அரங்குகளில் இந்தப் படம் வெளியாவதை உறுதி செய்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன், சிம்ரன், ரவி ராகவேந்திரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments