கோபாலபுரம் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் சம்பாதிப்பதற்காக புதிய சட்டமன்றத்தை அமைக்க முயற்சிக்கின்றனர். இதனை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. அங்கு ஒரு செங்கல்லை கூட வைக்கவிடமாட்டோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த வார்னிங்கை முதல்வர் ஸ்டாலின் எந்த அளவுக்கு சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தை தான் அறிவிக்கும் முன்பே அண்ணாமலைக்கு எப்படி தெரிந்தது என்பதுதான் அவரின் கேள்வியாக இருப்பதாகவும். இதன் விஷயத்தில் அவர் அரசு உயரதிகாரிகள் மீது கடும் கோபத்தில் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக அரசியல் கட்சிகளுக்குள் எப்படி பல்வேறு கோஷ்டிகள் இருக்கின்றவோ, அதேபோன்றுதான் திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிியில் இருந்தாலும், இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவாக செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எப்போதும் இருக்கதான் செய்கின்றனர். இதன் காரணமாகவே ஆட்சி மாற்றம் நிகழும் ஒவ்வொரு முறையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிரடியாக மாற்றப்படுகின்றன.
அப்படியிருந்தும் ஆளுங்கட்சி மீது ஏதோ சில காரணங்களுக்காக அதிருப்தியில் இருக்கும் உயரதிகாரிகள் மூலமோ, எதிர்க்கட்சி ஆதரவு மனநிலையில் இருக்கும் அதிகாரிகள் வாயிலாகவா அரசின் இதுபோன்ற முக்கிய கொள்கை முடிவுகள் குறித்த தகவல்கள் எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகங்களுக்கு முன்கூட்டியே கசிந்து விடுகின்றதாக கோட்டை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
புதிய சட்டப்பேரவை விஷயத்தில் அண்ணாமலைக்கு தகவல் தந்த கருப்பு ஆடுகள் யார் என்று உடனடியாக கண்டறிய வேண்டும் என்றும், இனியொரு முறை அரசின் கொள்கை முடிவுகள் இனியொரு முறை இப்படி வெளியே கசியக்கூடாது எனவும் அரசு உயரதிகாரிகளிடம் ஸ்டாலின் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள கூறியுள்ளன.