Friday, June 24, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்mk stalin vow: முதல்வர் ஸ்டாலின் புதிய சபதம்; மக்களுக்கு இனி..மகிழ்ச்சி தான்! - minister...

mk stalin vow: முதல்வர் ஸ்டாலின் புதிய சபதம்; மக்களுக்கு இனி..மகிழ்ச்சி தான்! – minister k. r. periyakaruppan said that chief minister mk stalin has taken vow to work for the people of tamil nadu

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.

இதன் பிறகு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:

நமது மாநிலம் ஓராண்டு காலத்தில் முழுமையான வளர்ச்சியை எட்டி விட முடியாது. கடந்த ஆட்சியாளர்கள் செய்து வைத்துள்ள குளறுபடி, அவர்கள் செய்து வைத்து இருந்த சேதாரங்களை எல்லாம் சரி செய்து நிர்வாகத்தை சீர்படுத்த அதற்கு 6 மாத காலம் ஆகிவிட்டது.

ஓராண்டை கடந்த நிலையிலும் கூட ஆறு மாத கால அரசு தான் நடத்த முடிந்தது. நிர்வாக எந்திரம் இப்பொழுது முறைபடுத்தப்பட்டு உள்ளது. இந்த ஓராண்டு காலத்தில், இப்பொழுது டாப் கியருக்கு வந்துள்ளது.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் நீக்கம்?; முதல்வரை சந்தித்ததால் எடப்பாடி கோபம்!

மின்னல் வேகத்தில் இனி தமிழகம் வளர்ச்சிப் பாதையை எட்டிச் செல்லும். அதற்கான உழைப்பை கடந்த ஓராண்டு காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தந்துள்ளார்.

இனி வரும் நாட்களில் கலைஞர் கருணாநிதி போல, அண்ணாவை போல மக்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி பாடுபட்டதோ, அதைப்போல் நானும் உழைப்பேன்… உழைப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் சபதம் எடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். அமைச்சர் பெரிகருப்பன் வெளியிட்டு இருக்கும் இந்த தகவல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments