திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்த திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் தலைமை காவலர் கதிரவன் என்பவர் வாழ்த்து பேனரை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் வைத்துள்ளார். இச்சம்பவம் சக காவலர்கள், மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து சமுக வளைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தது. இதனைத்தொடர்ந்து பேனரை அங்கிருந்து அகற்றிய காவல்துறையினர் அதனை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், தலைமைக்காவலர் கதிரவன் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் அனுமதியின்றி பொது இடத்தில் பேனர் வைத்ததாகவும் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஆயத படை காவலர் கதிரவன், ஆயுதப் படையில் பணியாற்றி வரும் நிலையில், சட்டம் – ஒழுங்கு காவல் நிலைய பணிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
செய்தியாளர் : ஆர்.ராஜவேல், பெரம்பலூர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.