Omicron strains BA.4 and BA.5 can escape vaccines and immunity | ஒமிக்ரான் எச்சரிக்கை: தடுப்பூசியும் நோய் எதிர்ப்பு சக்தியும் BA 4 மற்றும் BA 5 மாறுபாடுகளை எதிர்க்காது

கொரோனாவின் தாக்கம் உலகில் முடிவுக்கு வந்துவிட்டது என்று மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டால், அதை தவறு என்று சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளன.

கொரோனா வைரஸின் ஓமிக்ரான் விகாரங்கள் BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றை கொரோனா தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஐரோப்பிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த இரண்டு வகை விகாரங்களும் தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறமையை பெற்றுவிட்டன. கொரோனா பாதிப்புகள் ஏற்படுத்தும் அச்சமும் உலகை உலுக்குகிறது.

கொரோனாவின் ”கோடைக்கால அலை” பரவுவதான அச்சங்களுக்கு இடையில், BA.4 மற்றும் BA.5 ஆகிய ஓமிக்ரான் விகாரங்கள் இரண்டுமே  ”கவலையின் மாறுபாடுகள்” என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்தம் உங்களை என்ன செய்யும்

பிப்ரவரியில் கண்டறியப்பட்ட இந்த இருவகை ஒமிக்ரன் மாறுபாடுகளும், தென்னாப்பிரிக்காவில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், ஐரோப்பா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. 

“இந்த மாறுபாடுகளின் இருப்பு வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் EU/EEA இல் Covid-19 வழக்குகளில் குறிப்பிடத்தக்க ஒட்டுமொத்த அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்று  ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போர்ச்சுகலில் மே 8 ஆம் தேதி வரை பதிவான கொரோனா பாதிப்பில் 37 சதவீத  வழக்குகள் BA.5 விகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ECDC கவலையடைந்துள்ளது.

உலக அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் கொரொனாவின் தினசரி வளர்ச்சி விகிதம் 13 சதவீதம் என்பது, தென்னாப்பிரிக்காவில் பதிவானதைப் போலவே இருப்பதாக  போர்த்துகீசிய தேசிய சுகாதார நிறுவனத்தின் தரவுகள் உறுதி செய்கின்றன.  

மேலும் படிக்க | இந்தியா-UAE தடையற்ற வாணிப ஒப்பந்தம் MSME துறைக்கு ஊக்கம் அளிக்கும்

கொரோனா பாதிப்பின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால், 22 மே 2022க்குள் போர்ச்சுகலில் BA.5 ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறும் என்று நம்பப்படுகிறது.

பி.ஏ. 4 மற்றும் பி.ஏ. 5 ஆகிய வகை வைரஸ்களுக்கு, தடுப்பூசி போடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு மட்டுமே பெரும்பாலான தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதும், காலப்போக்கில் தடுப்பூசியின் தாக்கம் குறைந்துவிட்டால், நோயெதிர்ப்பு பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம் என்பது கவனிக்கத்தக்கது. 

BA.4 மற்றும் BA.5 தொடர்பான அறிகுறிகள் தொடர்பாக விழிப்புடன் இருக்கும்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளையும் ECDC கேட்டுக் கொண்டுள்ளது. மீண்டும் கோவிட் பரவினால், அது, மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை திறன் ஆகிய இரண்டிலும் அழுத்தத்தை அதிகரிக்கும்.

“நோய் அதிகரிக்கும் சமிக்ஞைகள் வெளிப்பட்டால், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சில அல்லது அனைத்து பெரியவர்களுக்கும் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கும் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்” என்று ECDC பரிந்துரைக்கிறது.

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment

Your email address will not be published.