Friday, June 17, 2022
Homeசினிமா செய்திகள்Oscars 2022 விழா மேடையில் வில் ஸ்மித் செய்தது சரியா? கிரிஸ் ராக்கின் நகைச்சுவை எல்லை...

Oscars 2022 விழா மேடையில் வில் ஸ்மித் செய்தது சரியா? கிரிஸ் ராக்கின் நகைச்சுவை எல்லை மீறலா? | Oscars 2022: Chris Rock vs Will Smith: What went wrong?

ஒரு குயிக் பிரேக் எடுத்து, கிறிஸ் ராக் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், அமெரிக்கக் கலாசாரத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் ‘நின்றபடி நகைச்சுவை’ (Stand Up Comedy) என்பதன் பின்னணியைப் பார்த்துவிட வேண்டியது அவசியம். இயல், இசை, நாடகம் என்ற நம் முத்தமிழில் மேடைப் பேச்சு என்பது நேரடியாக அடங்காது என்றாலும், சொற்பொழிவு, பட்டிமன்றம் என மேடைப்பேச்சு ஒரு கலைவடிவாக ஏற்கப்பட்டுவிட்டது. திராவிட இயக்கம் மேடைப் பேச்சு என்பதை கலை இலக்கிய வடிவிலிருந்து அரசியல் மேடைகளுக்குக் கொண்டு வந்து அதில் பிரமாண்ட வெற்றியும் பெற்றது. அந்தக் கலையில் திறன் பெற்ற சிலர் தங்களது பேச்சுக்களில் நகைச்சுவையைக் கலந்து கைத்தட்டல்களை அள்ளுவதைப் பார்க்கிறோம்.

அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தில் இருக்கும் உரிமைகளில் முக்கியமானது பேச்சுரிமை. கட்டற்ற சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திருத்தம் அமெரிக்காவை வடிவமைத்ததில் முக்கிய இடம் பெறுகிறது. அதில் மிக முக்கிய இடம் நகைச்சுவைப் பேச்சு வடிவத்திற்கு உண்டு. மார்க் ட்வைன் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். அவர் சில வருடங்கள் பணிபுரிந்த செய்தித்தாள் நிறுவனத்தின் அலுவலகம் இப்போது வட கலிபோர்னியாவில் அருங்காட்சியமாக இருக்கிறது.

மார்க் ட்வைன் | Mark Twain

மார்க் ட்வைன் | Mark Twain
A.F. Bradley, New York, Public domain, via Wikimedia Commons

19ம் நூற்றாண்டில் புகழ் பெற்ற நகைச்சுவைப் பேச்சாளாராக உலகையே வலம் வந்திருக்கிறார் என்பதை அங்கிருக்கும் ஆவணங்களிலிருந்து தெரிந்து கொண்டேன். அவரைத் தொடர்ந்து பலர் நகைச்சுவைப் பேச்சாளர்களாக பெரும் பணமும் புகழும் சம்பாதித்தபடி வந்தபடியே இருக்கிறார்கள். சயின்ஃபெல்ட், ட்ரவர் நோவா, டான் சப்பேல், கெவின் ஹார்ட் போன்றவர்களின் நகைச்சுவை நான் நேரில் பார்த்தவற்றில் மிகவும் ரசித்தவை. கோவிட் லாக்டௌனிற்குப் பின்னர் முதல்முறையாக நியூயார்க்கிற்குச் சென்ற அக்டோபரில் பயணம் செய்தபோது மேற்கொண்ட ஒரே பொழுதுபோக்கு – பள்ளி நண்பன் ஜெகன் கண்ணனுடன் ரேடியோ சிட்டி வளாகத்தில் நகைச்சுவையாளர் ஜிம் ஹேவிகனின் நகைச்சுவைப் பேச்சைக் கேட்கச் சென்றது.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இரண்டிலும் பிரபலமாக இருக்கும் ரிக்கி ஜெர்வேஸுடன் நேரடியாகப் பழகி, வணிக ரீதியாகப் பணி புரிந்த அனுபவம், நகைச்சுவைப் பேச்சாளர்கள் எழுதியிருக்கும் சுய சரிதைகள் தேடிப்படிக்கும் பழக்கம் என்பதன் அடிப்படையில், ‘நகைச்சுவைப் பேச்சு’ என்ற கலையின் தீவிர ரசிகன் நான் எனத் தயக்கமில்லாமல் கூற முடியும்.

நிற்க!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments