Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Parasite இயக்குநர்,Batman நடிகர்,Warner தயாரிப்பு: பெயரிடப்படாத படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு! |article about parasite director's...

Parasite இயக்குநர்,Batman நடிகர்,Warner தயாரிப்பு: பெயரிடப்படாத படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு! |article about parasite director’s new project with robert pattinson

2019 -ல் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்றது Parasite படம். இப்படத்தின் இயக்குநர் Bong Joon-Ho -வின் அடுத்த படம் குறித்து இரண்டு வருடங்களாக எந்தவித அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் அடுத்து அவர் இயக்கவிருக்கும் படம் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பிரபல நாவலாசிரியரான எட்வர்ட் ஆஷ்டனின் புதிதாக வெளியாக இருக்கும் ‘Mickey7’ என்கிற நாவலைப் படமாக்க உள்ளார் Bong Joon-Ho. இந்தப் படம் Sci-Fi ஜானரில் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Robert Pattinson

Robert Pattinson
Kimberly White

மிக்கி எனும் பணியாளர் நிபெல்ஹெம் (Niflheim) எனும் ஐஸ் உலகத்தை காலனிமயமாக்க அனுப்பி வைக்கப்படுகிறான். ஆபத்தான மிஷன். உயிர் இழக்கக்கூடிய அபாயம் இருப்பினும் குழு அவனை அனுப்பிவைக்கிறார்கள். அவன் இறந்தாலும் மீண்டும் அதே நினைவோடு உயிர் பெறுகிறான். ஆறு முறைக்குப் பிறகு அவனுக்கு புரிகிறது. தான் ஏன் இங்கு அனுப்பி வைக்கப்படுகிறோம் என்பது. இப்படியாக அந்த நாவலின் சுருக்கம் உள்ளது. இருப்பினும் Bong Joon-Ho அவருடைய ஸ்டைலில் தான் படம் எடுப்பார் என ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். 2013 இல் அவர் எடுத்த Snowpiercer பிரெஞ்ச் கிராபிக் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரபல தயாரிப்பு நிறுவனமான Warner Bros இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். மேலும் பிளான் பி, கேட் ஸ்ட்ரீட் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் பாங்கின் தயாரிப்பு நிறுவனமான அவுட்பிட் ஆப்ஸ்கிரீன் ஆகியனவும் தயாரிப்பில் இணைகின்றனர். நடிகர் ராபர்ட் பேட்டின்சன் இதில் நடிக்க உள்ளார். அவரது பேட்மேன் படம் மார்ச் – 4 இல் திரைக்கு வருகிறது. அந்தப் படத்தின் தயாரிப்பும் Warner Bros நிறுவனம் தான். இந்த ஆச்சர்யமா காம்போவால் தற்போதே படத்தின் மீதான பரபரப்பு எகிறத் தொடங்கியுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments