சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு குறித்து பேசிய பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி, இந்திய திருநாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க மாநிலம், அனைத்து நிலைகளிலும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை மையமாக வைத்து ஆட்சி அதிகாரத்தை உருவாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை.
1919ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உருவாக்கப்பட்டு 1920ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அன்றைய நாளில் இருந்து தமிழ்நாட்டில் முதல்வர் வரிசையில் அமர்ந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, வரலாற்று சிறப்புமிக்கவர்கள்.
முதல்வர் இருக்கையில் அமர்ந்து சொல்லும் செயலும் எவ்வாறு இருக்கிறதோ அதேப்போல்தான் நாடும் நாட்டின் வளர்ச்சியும் இருக்கும்.
நடுநிலையோடு பதில் கூறவேண்டுமென்றால் ஓராண்டு என்பது சாதாரண காலமல்ல. உலகையே உலுக்கிக் கொண்டிருந்த ஒரு கொரோனா காலம்,பொருளாதாரம் இல்லை என்ற காலம். ஆனால் முதல்வர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அனைத்து இடங்களுக்கும் மக்களை தேடி சென்று மக்கள் உயிரை காத்தவர் தமிழக முதல்வர்.
இதையும் படிங்க|: ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு.. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்த சாதனைகள் என்ன?
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியலில் பழுத்த பழம். மேலும் அவருக்கு துணையாக இருக்கும் மூத்த அமைச்சர்கள் திறமை மிக்கவர்கள். பேரவையில் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் அன்போடு அரவணைக்கும் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதியிலும் கல்லூரிகளை வழங்கிவரும் பரந்த நோக்கம் கொண்ட முதல்வராக தமிழக முதல்வர் இருக்கிறார்.
முதல்வர் இன்று 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் சாதாரண அறிவிப்புகள் அல்ல. திமுக அரசின் ஓராண்டு சாதனை ஆட்சியை பாமக மனதார பாராட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.