Sunday, July 3, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்prime minister modi said tamil language is eternal tamil culture is global...

prime minister modi said tamil language is eternal tamil culture is global | புதிய கல்விக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் பயன்பெறுவார்கள்

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘தமிழ்நாட்டுக்கு திரும்ப திரும்ப வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மக்கள், கலாச்சாரம், இந்த மாநிலத்தின் மொழி மிகச்சிறப்பானது. செந்தமிழ் நாடு எனும் போதினிலே.. இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று மகாகவி பாரதியார் பாடியுள்ளார்.

நண்பர்களே எல்லா துறைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். தமிழ் மொழி அழிவில்லாதது. தமிழ் கலாச்சாரம் உலகம் தழுவியது.

அண்மையில் செவித்திறன் குறைப்பாடு கொண்டவர்களுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு எனது இல்லத்தில் விருந்தளித்தேன். இப்போட்டியில் இந்தியா சிறப்பாக பங்களித்தது என்பதை நீங்கள் அறியவேண்டும்.

அதில், நாம் வென்ற 16 பதக்கங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் 6 பதக்கங்களை வென்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? சென்னை முதல் கனடா வரை… மதுரை முதல் மலேசியா வரை… நாமக்கல் முதல் நியூயார்க் வரை… சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை.. பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் தமிழ்நாட்டின் மகனான முருகன் சிகப்பு கம்பளத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் நடந்து சென்றது உலகம் முழுவதும் நம்மை பெருமைக் கொள்ளச் செய்தது.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. சமூக கட்டமைப்புகளை மேம்டுத்துவதன் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடையும். ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீரை கொண்டு சேர்ப்பதற்கு உழைத்து கொண்டு இருக்கிறோம்.

அதிவேக இணைய சேவையை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சேர்ப்பதே எங்களின் தொலை நோக்கு திட்டம். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் மேலும் கவனபடுத்த இந்திய அரசாங்கம் முழு அர்பணிப்புடன் இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கியது அதற்கு முழுமையும் மத்திய அரசே பணம் கொடுத்து வருகிறது.

புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்கள் அவர்களின் மொழியிலே படிக்கலாம். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் பயன் அடைவார்கள். யாழ்பானத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான். இலங்கை மக்களுக்கு சாலை போக்குவரத்து கலாச்சார மேம்படுத்துதல் தான். 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பயணத்தை தொடங்கினோம். சுதந்திர போராட்ட தியாகிகள் வளர்ந்த இந்தியாவை காண நிறைய கனவுகள் கண்டனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை வளமானதாகவும், வளர்ச்சியாகவும் மாற்ற பாடுபடுவோம்’ என்று தெரிவித்தார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments