Saturday, June 18, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்r n ravi report: ஆர்.என். ரவி அமித் ஷாவுக்கு அனுப்பிய சீக்ரெட் ரிப்போர்ட்... ஸ்டாலின்...

r n ravi report: ஆர்.என். ரவி அமித் ஷாவுக்கு அனுப்பிய சீக்ரெட் ரிப்போர்ட்… ஸ்டாலின் ஆட்சிக்கு சிக்கல்? – sources said tn governor r n ravi sent report to home minister amit shah over religious conversion happening in tamil nadu

தமிழக அரசு ஹிந்து மத கோயில்களை மட்டும் குறிவைத்து இடித்து வருகிறது. அதுவே ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ள மசூதிகளையும். சர்ச்களையும் கண்டுகொள்ளவில்லை என்று பாஜகவின் ஹெச்.ராஜா போன்றவர்கள் திமுக அரசு மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

பிற மதங்களின் பண்டிகைகளின்போது பொதுமக்களுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்லாதது ஏன் என்று சட்டப்பேரவையில் கேள்வி கேட்டு, எடப்பாடி பழனிசாமியும் இந்த விஷயத்தில் தன் பங்குக்கு தூபம் போட்டுள்ளார்.

திமுக அரசு ஹிந்துக்களுக்கு எதிரானது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த சிலர் முயற்சி வருகின்றனர். ஆனால் அவர்களின் எண்ணம் ஒருபோதும் எடுபடாது என்று இபிஎஸ், ஹெச்.ராஜா உள்ளிட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே சமீபத்தில் ஆணித்தரமாக பதிலடி கொடுத்திருந்தார்.

ஆனாலும் ஹிநது மத விவகாரங்களில் திமுக அரசு அவ்வபோது விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், அண்மையில் விஸ்வரூபம் எடுத்த தருமபுரம் ஆதினத்தின் பட்டின பிரவேச விவகாரத்தில், மனிதனை மனிதன் சுமக்கலாமா? என்றெல்லாம் ஆரம்பத்தில் பேசப்பட்டு வந்தாலும், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடைசியில் சமரசம் செய்து கொள்ள வேண்டியதானது.

‘ஸ்டாலினை எப்படி அழைப்பீர்கள்?’ – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி!
இத்துடன் பிரச்னை முடிந்துவிட்டது என்று நினைத்தால், முதல்வர் ஸ்டாலினின் தூக்கத்தை கலைக்கும்படியான ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அண்மையில் ஒரு அறிக்கை அனுப்பியுள்ளாராம். அதில், “தருமபுரம் ஆதினம் உள்பட மாநிலத்தின் பல கோயில்களுக்கு தான் சென்றுள்ளதாகவும், அங்கெல்லாம் பல்வேறு இந்து சமய தலைவர்களையும் சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஆர்என்ஆர், தங்களை தமிழக அரசு கொஞ்சமும் மதிப்பதில்லை என்று ஹிந்து மத தலைவர்கள் தன்னிடம் வேதனையுடன் கூறுவதுடன், ஹிநது மத சம்பிரதாயங்களில் திமுக அரசு தேவையில்லாமல் தலையிட செய்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்’ என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளாராம்.

‘இதைவிட முக்கியமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய திமுக அரசு. இதனை கண்டு கொள்வதே இல்லை’ என்றும் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளராம்.

வடகலை, தென்கலை பாரபட்சம்… அரசுக்கு ஐகோர்ட் அட்வைஸ்!
‘இவை தொடர்பாக தான் கேட்ட விளக்கத்துக்கு, தமிழக தலைமைச் செயலாளரிடம் இருந்து இதுவரை பதில் எதுவும் வரவில்லை என்றும் அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ஆளுநர் ஆதங்கப்பட்டுள்ளாராம்.

ஆர்.என். ரவியின் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சென்சிட்டிவ்வான விஷயங்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசிடம் விரைவில் விளக்கம் கேட்க கூடும் என்பதால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments