Thursday, June 30, 2022
Homeஜோதிடம்remedies for love marriage: உங்கள் காதலில் பிரச்னையா?, காதல் திருமணம் இனிமையாக எளிய தீர்வு...

remedies for love marriage: உங்கள் காதலில் பிரச்னையா?, காதல் திருமணம் இனிமையாக எளிய தீர்வு தேவையா? – these 4 planets become a hindrance in love marriage : do this simple remedies and get happy life

ஒருவர் தன் வாழ்வில் இரண்டாம் பாகத்தை தொடங்குவது திருமண வாழ்க்கையில் தான். ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது தனக்கு பிடித்த ஒரு நபரை சந்தித்திருப்பார்கள். இவர் தன் வாழ்க்கைத் துணையாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதுண்டு. பலரும் அப்படி நினைக்கக்கூடிய நபர் மீதான காதலை வெளிப்படுத்தி, காதலித்து திருமண உறவில் ஈடுபடுவதுண்டு.

இருப்பினும் அனைவருக்கும் தான் விரும்பிய, பிடித்தமான நபர் வாழ்க்கைத் துணையாக அமைவதில்லை. பலரின் காதல் கடின முயற்சிக்கு பின்னரும் தோல்வியில் முடிந்ததுண்டு. அதற்கு அவர் மட்டும் காரணமாக இருக்காது, அவரின் விதியும் காரணமாக இருக்கும். விதியின் ரூபமான அவரின் ஜாதகத்தில் சுக்கிரன், குரு, புதன், ராகு ஆகிய 4 கிரகங்கள் பலவீனமாக இருந்தால் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சில தடைகளை சந்திக்க வேண்டி வரும். ஒருவரின் ஜாதகத்தில் இந்த கிரகம் பலவீனமாக இருந்தால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மறைந்துவிடும்.

கலியுகத்தில் ஆண்களுக்கான திருமண வயது என்ன தெரியுமா? – பெண்களுக்கான திருமண வயது தெரியுமா?
உங்கள் கிரக நிலை காதல் திருமணம் வெற்றிகரமாக அமையுமா இல்லையா என்பதைப் பார்ப்போம்…
ஒருவரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையுமா இல்லை என்பதை அவரின் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலையும், தற்போது நடக்கும் கிரக பெயர்ச்சிகளான கோள்சார பெயர்ச்சிகளைப் பொருத்து தான் அமையும்.

ஒருவரின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு மற்றும் வாழ்க்கைத் துணை, காதல், திருமண வாழ்க்கையை அமைப்பை கூறக்கூடிய மனைவி, தொழில் கூட்டாளி ஸ்தானமான 7ம் வீட்டின் பலத்தைப் பொருத்து தான் அமையும். இந்த வீடுகள் பலமில்லாமல் அல்லது அசுப கிரகங்களின் ஆதிக்கம் இருந்தால், அதற்கான பரிகாரங்களை ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை செய்வதால் பாதிப்பு அதிகம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

எளிய பரிகாரங்கள் :
லட்சுமி நாராயண மந்திரம் :
காதல் திருமணத்தில் வெற்றி பெற சுக்ல பட்ச காலத்தில் (வளர்பிறை) வரக்கூடிய வியாழக்கிழமைகளில் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி தேவியை வணங்கி, ‘ஓம் லட்சுமி நாராயணா நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வாருங்கள். இந்த பரிகாரத்தை மூன்று மாதங்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

இந்த நிற ஆடைகளை அணிந்து வாருங்கள் :
வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு உரிய மஞ்சள் நிற ஆடையும், வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு உகந்த வெள்ளை நிற ஆடையும் அணிந்து வர, காதல் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். வைர ரத்தினங்கள் அணிவதும் பலன் தரும்.

எளிய பீஜ மந்திரம் :
காதல், திருமண உறவு இனிமையாக அமைய சுக்கிரன் வலுவாக இருக்க வேண்டும். காதல் கைகூடுவதற்கு மட்டுமில்லாமல், திருமண உறவில் அமைதியும், இன்பமும் நிறைந்ததாக இருக்க வேண்டுமெனில் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடுவதும், சுக்கிரனுக்குரிய மூலம் மந்திரமான, “ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேச்வராய சுக்ராய நம” என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.

சுக்ர காயத்ரீ மந்திரம்
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

சூரியனுக்கு தர்ப்பணம் கொடுப்பது :
ஜாதகத்தில் ஐந்தாம் வீடும், ஏழாம் வீடும் பலப்படுத்த தினமும் காலையில் எழுந்து நீராடி, சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரம் உச்சரித்து, அவருக்கு நீர் வார்த்து வழிபடவும்.

சூரிய காயத்ரி மந்திரம்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

குறிப்பு: இந்தத் தகவல்கள் அனைத்தும் பொது நலனைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான இறைவனை வழிபடுவதும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிட பரிகாரங்கள் முயல்வதும் அவரவர் விருப்பம். இந்த தகவல் குறிப்பின் நோக்கம் உங்களுக்கு சிறந்த ஆலோசனை வழங்குவது மட்டுமே. இது மட்டுமே சரியான தீர்வு என நாங்கள் கூறவில்லை.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments