தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்த கையோடு, எடப்பாடி, சேலம் ராஜகணபதி கோயிலில் ஆன்மீக சுற்றுப் பயணத்தை நிறைவுச் செய்தார். கடந்த, ஏப்ரல், 26ம் தேதி, 3ம் கட்ட ஆன்மீகப் பயணத்தை துவங்கியபோது, “அரசியல் பயணத்தை விரைவில் துவங்குவேன்” என்று சூளுரைத்தார்.
திருச்சியில் இருந்து கார் மூலம், நாகை மாவட்டம் திருக்கடையூர் சென்ற சசிகலா, அமிர்தகடேசுவரர் அபிராமியம்மன் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார். அடுத்ததாக, சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோயிலில் சசிகலா ஸ்வாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, வேளாங்கண்ணி மாதா தேவாலயம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு வழிபாடுகள் செய்து, தனது ஆன்மிகப் பயணத்தை நிறைவுச் செய்தார்.
இந்நிலையில், இறுதிக்கட்ட ஆன்மிகப் பயணத்தை இன்று துவக்கியுள்ள வி.கே.சசிகலா, விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். இங்கிருந்து கார் மூலம் கிளம்பி, சிக்கல் கோயில் செல்லும் சசிகலா, நவநீதேஸ்வர், சிங்கார வேலரை தரிசனம் செய்கிறார். கடந்த முறை சசிகலா சிக்கல் கோயில் வந்தபோது வேல் வாங்கி கொடுத்தாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் அங்கே செல்லும் அவர், கோயிலில் இருந்து வேல் ஒன்றை வாங்க இருக்கிறார்.
அந்த வேலை எடுத்துக் கொண்டு, நாளை திருச்செந்தூர் செல்கிறார். அங்கு வேலை வழங்கி, செந்தில் ஆண்டவரை தரிசனம் செய்துவிட்டு, தனது ஆன்மிகச் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.
சசிகலா
‘சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பார்வதி, முருகனுக்கு வேல் எடுத்து கொடுத்த ஸ்தலம் சிக்கல். இங்கு வழிபாடு நடத்தினால் சிக்கல்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். மேலும், சிக்கலில் வேல் வாங்கிய சிங்காரவேலர், திருச்செந்தூரில் செந்தில் ஆண்டவராக, சூரனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அதனடிப்படையிலேயே, சிக்கலில் வேல் வாங்கி, திருச்செந்தூருக்கு சசிகலா செல்கிறார். இதன் மூலம் சசிகலாவிற்கு ஆன்ம பலம் பெருகும். விரைவில் அரசியல் பயணத்தை துவங்கவிருக்கும் சசிகலா, தனது அரசியல் எதிரிகள் மற்றும் துரோகிகளின் சதித்திட்டங்களை சுக்குநூறாக தகர்ந்தெறிந்து, அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்” என்கின்றனர் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.