Sunday, July 10, 2022
Homeசினிமா செய்திகள்serial actress says about her casting coach experience - தமிழ் News

serial actress says about her casting coach experience – தமிழ் News

மகள் அட்ஜஸ்ட் பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை அம்மா அட்ஜெஸ்ட் செய்தால் போதும் என திரையுலக பிரமுகர் ஒருவர் கேட்டதாக பிரபல நடிகை ஒருவர் ஷாக்கிங் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். இவர் பள்ளிப் படிப்பின்போது சீரியலில் நடிக்க வந்துள்ளார் என்பதும் ஆதித்யா சேனல், கலர்ஸ் சேனல், விஜய் டிவி உள்பட பல தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ’செந்தூரப்பூவே’ சீரியல் மூலம் தான் இவர் பிரபலம் ஆனார் என்பதும் அதன் பிறகு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த கேள்விக்கு ’நான் சிறு வயதிலேயே இந்த அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பிரச்சினையை சந்தித்து உள்ளேன் என்றும் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க தன்னை அழைத்ததாகவும், அப்போது அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று அந்த படத்தின் பிரபலம் ஒருவர் கூறியதாக ஷாக்கிங் தகவலை தெரிவித்தார்.

தனக்கு அப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் என்றால் என்னவென்று அந்த வயதில் புரியவில்லை என்றும், நாங்கள் யோசிப்பதை பார்த்து ’மகள் அட்ஜெஸ்ட் பண்ணவில்லை என்றால் கூட பரவாயில்லை, அம்மா அட்ஜெஸ்ட் செய்தால் போதும் என்று கூறியது தன்னுடைய அம்மாவுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாகவும் ’நாங்கள் அந்த மாதிரி ஃபேமிலி இல்லை’ என்று கூறிவிட்டு அம்மா என்னை அழைத்துக் கொண்டு வந்து விட்டதாகவும் கூறினார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments