Thursday, June 30, 2022
Homeஜோதிடம்Simmam Shani Athisara Palan: சிம்ம ராசி அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் - கண்ட...

Simmam Shani Athisara Palan: சிம்ம ராசி அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் – கண்ட சனி தரும் சங்கடமும், சாதகமும் – saturn retrograde effect on leo 2022: kanda sani athisara peyarchi palan

சனி அதிசார பெயர்ச்சி :
சனி பகவான் அதிசார பெயர்ச்சியாக ஏப்ரல் 29ம் தேதி தற்போது சஞ்சரித்து வரும் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு செல்ல உள்ளார். ஜூலை 11ம் தேதி வரை அங்கு சஞ்சரிப்பார்.

இந்த 75 நாட்களில் குறிப்பிட்ட ராசியினருக்கு நற்பலன்களும், குறிப்பிட்ட ராசியினருக்கு சில சங்கடங்களும் ஏற்படக்கூடும்.

சிம்ம ராசிக்கு கண்ட சனி ஆரம்பம் :
சிம்ம ராசிக்கு 7ம் வீடான சம சப்தம ஸ்தானம் எனும் மனைவி, துணை, தொழில் கூட்டாளி ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
இந்த குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு கண்ட சனி ஆரம்பமாகி அதற்கான பலன்கள் கிடைக்கும். அதிசார சனி பெயர்ச்சி முடிந்ததும் உங்களுக்கு சனி பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறையும்.

அதிசார சனி பெயர்ச்சி 2022 : கோடீஸ்வர யோகம் பெறும் 6 ராசிகள்

கண்ட சனி தரும் பலன் :
6ம் இடத்திலிருந்து 7ம் இடத்திற்கு செல்ல உள்ளார். கண்ட சனி என்பது நீங்கள் நினைத்த ஒரு செயலை செய்து முடிக்கக்கூடிய அருமையான வாய்ப்பு வசதிகள் இருக்கும். இருப்பினும் அதனால் நீங்கள் பெறக்கூடிய பலன் கிடைக்க சிரமமும், காலதாமதமும் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு உடனடியான பலன் கிடைக்காது. இதனால் சில நேரங்களில் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கவில்லையே என்ற மன விரக்தி ஏற்படும். நீங்கள் திட்டமிட்ட சுப காரியங்கள் நடக்காமல் போகலாம்.

சனி பெயர்ச்சி 2022 : ஏழரை சனி யாருக்கு? எப்படிப்பட்ட கஷ்டம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

இருப்பினும் கவலை வேண்டாம். உங்களின் முயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். ஆனால் சிறிது காலதாமதம் ஆகும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, ”கடமையை செய், பலனை எதிர்பாராதே” எனும் பகவத் கீதை சொல்லை மனதில் கொண்டு உழைக்கவும். உங்கள் உழைப்பு வீண் போகாது.

தொழில், வியாபாரம் :
இந்த காலகட்டத்தில் எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் காத்திருக்கிறது. உங்களுக்கான நிதி நிலை உயர்வை ஏற்படுத்துவதற்கான அமைப்பு. குறிப்பாக சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அதை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

அதே போல வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், ப்ரீலான்ஸர் போன்றோருக்கு நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய காலம் :
மே 1 முதல் 15ம் தேதி வரை உங்கள் ராசி நாதன் சூரியனும், எதிர் கிரகமான சனி பகவான் எதிரெதிர் பார்வையில் இருப்பார்கள். அதனால் இந்த காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.

சனி அதிசார பெயர்ச்சி 12 ராசிக்கு என்ன சனி ஆரம்பிக்கப்போகிறது தெரியுமா?
ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. நாள்பட்ட நோய், வியாதிகள் சற்று பிரச்சினையைத் தரக்கூடும். வயதானவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.

நற்பலன் கிடைக்குமா?
பெரியளவில் நல்ல பலனை விரைவாக எதிர்பார்க்க முடியாது என்றாலும், சில ஆச்சர்யமூட்டம் அதிர்ஷ்டங்கள், முன்னேற்றங்கள் கிடைக்கும். குறிப்பாக கடின உழைப்பை மட்டும் கைவிட வேண்டாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments