Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்sivakarthikeyan: SK 21: கமல் தயாரிப்பில் ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்? செம காம்போவா இருக்கே..!...

sivakarthikeyan: SK 21: கமல் தயாரிப்பில் ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்? செம காம்போவா இருக்கே..! – sivakarthikeyan sk21 movie title revelead

தமிழ் சினிமாவில் தற்போது டாப்பில் சென்றுகொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் மளமளவென ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் இடையில் தொடர் தோல்விகளை சந்தித்தார. .எதிர்நீச்சல், மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ என தொடர் வெற்றிகளின் மூலம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் கிடுகிடு வென உயர்ந்தது.

ஆனால் சீமராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ போன்ற தொடர் தோல்விகளினால் அவரது மார்க்கெட் சற்று ஆட்டம் கண்டது. இந்நிலையில் கட்டாய வெற்றியை எதிர்பார்த்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு தற்போது மீண்டும் தொடர் வெற்றிகள் குவிய துவங்கியுள்ளன.

யூடூப் புகழ் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரைப்படம்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நெல்சன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று நூறு கோடி வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படமும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

உதயநிதி DON; சிவகார்த்திகேயன் பேச்சு!

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்

எனவே தொடர் வெற்றியினால் புது உத்வேகத்துடன் இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் SK20 படத்தில் நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்..

இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமல் தயாரிப்பில் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும் படத்தின் பெயர் மாவீரன் என்றும் ஒரு தகவல் வந்துள்ளது.

1986 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் மாவீரன் என்ற படம் வந்துள்ளது. எனவே கமல் தயாரிப்பில் ரஜினியின் டைட்டிலில் சிவகார்த்திகேயன் நடிப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments