நடிகரும் இயக்குனருமான சுந்தர்சி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பட்டாம்பூச்சி’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ’வேட்டைகள் ஆரம்பம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. நவ்நீத் சுந்தர் இசையில் பா விஜய் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
பத்ரி இயக்கியுள்ள இந்த படத்தில் சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு -கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவும், பென்னிஆலிவர் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘வேட்டைகள் ஆரம்பம்’ பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.