Sunday, June 19, 2022
Homeசினிமா செய்திகள்Suriya: சூர்யா - பாலா மோதலுக்கான உண்மையான பின்னணி: வெளியான பரபரப்பு தகவல்.! - reason...

Suriya: சூர்யா – பாலா மோதலுக்கான உண்மையான பின்னணி: வெளியான பரபரப்பு தகவல்.! – reason behinds suriya and bala fight

‘சூரரைப் போற்று’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானது. அண்மையில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்‘ படத்திற்கான டெஸ்ட் ஷுட்டிங்கில் கலந்து கொண்டார் சூர்யா.

இதனிடையில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது. 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். ‘சூர்யா 41‘ என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வந்தது. இந்தப்படத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியை அடுத்து மதுரையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இது 40 நாட்கள் ஷெட்யூல். அதனை தொடர்ந்து படக்குழுவினர் கோவாவிற்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சூர்யா அவசரமாக ஷுட்டிங்கில் இருந்து பாலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியேறி விட்டதாக இணையத்தில் தீயாய் தகவல்கள் பரவியது. ஆனால் இதெல்லாம் வதந்தி. படப்பிடிப்பை முடித்து விட்டே சூர்யா கிளம்பியதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, கன்னியாகுமரியில் மொட்டை வெயிலில் சூர்யாவை ஓட வைத்திருக்கிறார் பாலா. இந்த சேஸிங் சீனை காலையில் ஆரம்பித்து மதியம் வரை எடுத்து இருக்கிறார்.

‘புஷ்பா 2’ படத்தின் வெறித்தனமான அப்டேட்: மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!
இதனால் கடுப்பான சூர்யா மதியம் இடைவேளையில் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார். அதன் பின்னர் சூர்யாவிற்காக மாலை வரை காத்திருந்த படக்குழுவினர் அதன்பின்னர் பேக்கப் செய்து கிளம்பியுள்ளனராம். இந்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதனிடையில் ‘சூர்யா 41’ இதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் 15 நாட்கள் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா- ஜோதிகா மீது வழக்கு பதிய வேண்டும் – நீதிமன்ற உத்தரவு

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments